‘கரையை கடந்த நிவர்’.. இனி ‘கனமழைக்கு’ வாய்ப்பு இருக்கா.? வானிலை ஆய்வு மைய இயக்குநர் ‘முக்கிய’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை தொடரும் என தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று மாலை அதிதீவிர புயலாக வலுவடைந்து பின்னர் அதிதீவிர புயலாக மாறியது. இதனை அடுத்து நேற்று மாலை மணிக்கு 16 கிலோமீட்டர் வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்தது. புயல் புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் அருகே இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை கரையை கடந்தது. அப்போது புதுச்சேரி உள்பட சில பகுதிகளில் மணிக்கு 120 முதல் 140 கிலோமீட்டர் வரை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
இந்நிலையில் நிவர் புயல் கரையை கடந்ததை தொடர்ந்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ‘புதுச்சேரி அருகே இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 வரை புயல் கரையை கடந்தது. புயல் தற்போதுவரை தமிழகத்தின் நிலப்பகுதியில் தான் உள்ளது. காற்றும், மழையும் தொடரும். தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை தொடரும். தீவிரபுயல் அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழந்து புயலாக மாறி அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது’ என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்