'உதவி'ன்னு கேட்டு வந்த லெட்டருக்கு... 'நித்தியானந்தா' சொன்ன ‘அல்டிமேட்’ பதில்!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கைலாசா என்கிற நாட்டை உருவாக்கியுள்ளதாக நித்தியானந்தா அறிவித்திருந்த நிலையில், அந்த நாட்டிற்கான கொடி, பொருளாதார கொள்கை, வங்கி, நாணயங்கள் உள்ளிட்டவற்றை வரிசையாக வெளியிட்டு வருகிறார்.

'உதவி'ன்னு கேட்டு வந்த லெட்டருக்கு... 'நித்தியானந்தா' சொன்ன ‘அல்டிமேட்’ பதில்!!!

இந்நிலையில், கைலாசாவில் உணவகங்களை திறக்க வேண்டி, மதுரையை சேர்ந்த டெம்பிள் சிட்டி என்ற ஹோட்டலின் உரிமையாளர் குமார் அனுமதிக்கான கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். கைலாசாவில் தங்களது உணவகங்கள் செயல்பட அனுமதி தர வேண்டும் என்றும், நித்தியானந்தா அவர்களின் முடிவுக்காக காத்திருக்கிறோம் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இதற்கு பதிலளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்ட நித்தியானந்தா, கைலாசா நாட்டிற்கு தகுந்த அங்கீகாரம் கிடைத்த பின், தனது நிர்வாகிகளிடம் கூறி, உணவகங்களை கட்டுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.

மற்ற செய்திகள்