'சொத்துக்ளை எல்லாம் ஆளப்போவது யார்?' .. இப்போதே 'உயில்' எழுதி வைத்துவிட்ட 'நித்தியானந்தா'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தனது சொத்துக்கள் அனைத்தையும் யாருக்கு சேரவேண்டும் என்பது பற்றி இப்போதே உயில் எழுதிவைத்துவிட்டதாக நித்தியானந்தா கூறியுள்ளார்.
பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் நடந்த ரெய்டை அடுத்து அந்த ஆசிரம நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதேபோல், நித்தியானந்தாவின் குஜராத் ஆசிரமக் கிளை மீது எழுந்த புகாரை அடுத்து அந்த ஆசிரமம் இழுத்து மூடப்பட்டது. நித்தியானந்தாவின் மேனேஜராக இருந்த ஜனார்த்தனன் ஷர்மா அளித்த புகார்களும் சர்ச்சையை கிளப்பின.
ஆனால் அவரது மகள்களோ, தாங்களாக விருப்பப்பட்டுதான் சென்றதாகவும், தங்களை யாரும் கடத்தவில்லை என்றும் பேசியுள்ளனர். இதனிடையே நித்தியானந்தா கைலாசா தீவுநாட்டினை அமைக்கவுள்ளதாகவும் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டிருந்தார்.
அந்த தீவில் வசிப்பதற்காக 40 லட்சம் பேர் விண்ணப்பத்துள்ளதாகக் கூறியுள்ள நித்தியானந்தா, இயற்கை எய்திய பின், பெங்களூரு பிடதி ஆசிரமத்தில்தான் தனது உடலை நல்லடக்கம் செய்ய வேண்டும் என்றும், தனது சொத்துக்கள் யாருக்கு சேரவேண்டும் என்று இப்போதே உயில் எழுதிவைத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
அதன்படி திருவண்ணாமலை, காஞ்சிபுரம், மதுரை ஆகிய 3 இடங்களிலும் இருக்கும் தனது குரு பரம்பரை ஆதீனங்களுக்கு சொத்துக்களை எழுதிவைத்துள்ளதாக நித்தி மேலோட்டமாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் நித்யானந்தா இறந்த பிறகு தான் அவர் என்ன உயில் எழுதி வைத்திருக்கிறார் எனத் துல்லியமாகவும் விவரமாகவும் தெரியும் என்று தொண்டை மண்டல மடத்தின் மடாதிபதி ஞானப் பிரகாச பரமாச்சாரியார் தகவல் தெரிவித்துள்ளார்.