இந்த விஷயத்துல ‘கோவை’ தான் முதலிடம்.. வெளியான பட்டியல்.. என்ன தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > தமிழகம்நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டு எண் ‘நிதி ஆயோக்’ தரவரிசை பட்டியலில் தமிழகத்தின் இரண்டு நகரங்கள் இடம்பிடித்துள்ளன.
மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு நிலையான வளர்ச்சி இலக்கை எட்டுவதில் முக்கிய நகரங்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் முதல் முறையாக தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் மொத்தமாக 56 நகரங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
நாட்டின் நிலையான வளர்ச்சி இலக்குகள் பின்பற்றுவதை கண்காணிப்பது, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு மற்றும் கூட்டு நடவடிக்கைகளை ஊக்குவிப்பது போன்ற முக்கிய பணிகளை மத்திய அரசின் ‘நிதி ஆயோக்’ மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் 2021-ம் ஆண்டுக்கான மதிப்பீடுகளை ஜெர்மனியை சேர்ந்த வளர்ச்சி நிறுவனம் ஒன்றுடன் இணைந்து நிதி ஆயோக் இந்த பட்டியலை வெளியிட்டது.
இதில் கோவை 73.29 மதிப்பெண் பெற்று 2-ம் இடத்தை பெற்றுள்ளது. அதேபோல் திருச்சி 70 மதிப்பெண்களுடன் 8-வது இடத்தை பெற்றுள்ளது. சென்னை 69.36 மதிப்பெண்களுடன் 16-வது இடத்தையும், மதுரை 65.85 மதிப்பெண்களுடன் 26-வது இடத்தையும் பிடித்துள்ளது. இதில் சிம்லா 75.50 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ‘வறுமை ஒழிப்பு’ என்ற பிரிவில் 87 மதிப்பெண்கள் பெற்று கோவை முதலிடத்தை பிடித்துள்ளது. திருச்சி மற்றும் மதுரை 80 மதிப்பெண்களுடன் 2-ம் இடத்தை பிடித்துள்ளது. சென்னை 65 மதிப்பெண்களுடன் 10-வது இடத்தில் உள்ளது.
மற்ற செய்திகள்