‘அவருக்கு 3 குழந்தைங்க இருக்கு’!.. மதுபோதையில் நடந்த சண்டை.. தடுத்த தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுபோதையில் சண்டை போட்ட இருவரை தடுக்க சென்ற நபரை கட்டையால் அடித்ததில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘அவருக்கு 3 குழந்தைங்க இருக்கு’!.. மதுபோதையில் நடந்த சண்டை.. தடுத்த தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்..!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள எருமாடு திருமங்கலம் பழங்குடி கிராமத்தை சேர்ந்த பாபு மற்றும் அவரது நண்பர் பேபி இருவரும் டாஸ்மாக் கடைக்கு மது வாங்க சென்றுள்ளனர். நீண்ட வரிசையில் காத்திருந்து மதுவை வாங்கிய பின் இருவரும் சேர்ந்து அருந்தியுள்ளனர். போதையில் இருவருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை திடீரென கைகலப்பாக மாறியுள்ளது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியை சேர்ந்த விஜயன் என்ற தொழிலாளி அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பிரபு மதுபோதையில் கீழே கிடந்த கட்டையை எடுத்து சண்டையை தடுக்க வந்த விஜயன் தலையில் அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த விஜயன் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு விஜயனை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சண்டையை தடுக்க சென்று உயிரிழந்த விஜயனுக்கு சிந்து என்ற மனைவியும், 3 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News Credits: Vikatan