‘அந்த மனசுதான் சார் கடவுள்’!.. கொரோனா நிவாரண நிதியாக ரூ.1.20 லட்சம் வழங்கிய தூய்மை தொழிலாளர்கள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனாவை எதிர்கொள்வதற்காக முதல்வர் நிவாரண நிதிக்கு ஊட்டி நகராட்சி தூய்மை பணியாளர்கள் ரூ.1.20 லட்சம் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

‘அந்த மனசுதான் சார் கடவுள்’!.. கொரோனா நிவாரண நிதியாக ரூ.1.20 லட்சம் வழங்கிய தூய்மை தொழிலாளர்கள்..!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் கடுமையாக போராடி வருகின்றன. கொரோனாவை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. மேலும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற ஒவ்வொரு தனிப்பட்ட மக்களும் தங்களால் இயன்ற நிதியை அரசு அளித்து உதவலாம் என பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தனர். அந்த வகையில் பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் பிரதமர் மற்று முதல்வரின் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற நிதியை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டி முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். இதுகுறித்து தெரிவித்த தூய்மை ஊழியர்கள், ஊட்டி நகராட்சியில் பணியாற்றி வரும் நிரந்தர மற்றும் தற்காலிக பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் இணைந்து எங்களால் முடிந்த தொகையை வழங்கியுள்ளோம் என தெரிவித்துள்ளனர். இதேபோல் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திய்வா தனது ஒரு மாத சம்பளத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.