ரொம்ப நேரமா திறக்காத கதவு.. உள்ள போனவங்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி. கல்யாணமாகி 2 மாசத்துல தம்பதி எடுத்த விபரீத முடிவு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடி அருகே திருமணமாகி இரண்டே மாதங்களில் புதுமண தம்பதியர் தங்களது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஏஎம் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் தங்க முனியசாமி. 26 வயதான இவர் தனியார் நிறுவனத்தில் எலெக்ட்ரிக் பிரிவில் பணிபுரிந்து வந்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக தங்க முனியசாமியும் துவரந்தை பகுதியை சேர்ந்த சீதாலட்சுமி எனும் இளம் பெண்ணும் காதலித்து வந்திருக்கின்றனர். இவர்களது காதலுக்கு இருவரின் வீட்டிலும் எதிர்ப்பு இருந்ததாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக தங்க முனியசாமி மற்றும் சீதாலட்சுமி வீட்டினரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டனர். இதனை தொடர்ந்து இருவரும் வாடகை வீட்டில் ஒன்றாக வசித்து வந்திருக்கின்றனர். இதனிடையே இருவருக்குமிடையில் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இந்நிலையில், நேற்று இந்த தம்பதி குடியிருந்த வீட்டின் கதவு வெகுநேரமாகியும் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்திருக்கின்றனர்.
இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் தம்பதியின் வீட்டு கதவை தட்ட, எவ்வித பதிலும் வராததால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளனர். அப்போதுதான், தங்க முனியசாமி மற்றும் அவரது மனைவி சீதாலட்சுமி தங்களது உயிரை மாய்த்துக்கொண்டது தெரிய வந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக இதுகுறித்து தருவை குளம் பகுதி போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தூத்துக்குடி சப்- கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். திருமணமாகி இரண்டு மாதங்களில் புதுமண தம்பதி தங்களது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழத்தியுள்ளது.
தீர்வல்ல
எந்த ஒரு பிரச்சினைக்கும் உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, எதிர்மறை எண்ணம் எழுந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும்.
மாநில உதவிமையம் : 104 .
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050.
மற்ற செய்திகள்