நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்.. கல்யாணமாகி ஒரே வாரத்துல மாப்பிள்ளைக்கு நேர்ந்த துயரம்.. பெரும் சோகத்தில் கிராம மக்கள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தென்காசி அருகே திருமணமாகி ஒரே வாரத்தில் மாப்பிள்ளை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்.. கல்யாணமாகி ஒரே வாரத்துல மாப்பிள்ளைக்கு நேர்ந்த துயரம்.. பெரும் சோகத்தில் கிராம மக்கள்..!

Also Read | பெற்றோரிடம் ஷ்ரத்தா பேசிய கடைசி வார்த்தைகள்.. நாட்டையே உலுக்கிய கோரம்.. அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்..!

தென்காசி மாவட்டம், ஆனைகுளத்தைச் சேர்ந்தவர் பவுன்ராஜ். இவரது மகன் கலையரசன். 27 வயதான இவர் கடைய நல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்திருக்கிறார். இந்நிலையில் இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த வாரம் பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. திருமணத்திற்காக விடுப்பு எடுத்திருந்த கலையரசன், சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் வேலைக்கு சென்றிருக்கிறார். எப்போதும் இருசக்கர வாகனத்தில் கலையரசன் வேலைக்கு செல்வது வாடிக்கை.

இந்நிலையில், நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு கிளம்பிச் சென்றிருக்கிறார் கலையரசன். சுரண்டை - சாம்பவர் வடகரை சாலையில் அவர் சென்றுகொண்டிருந்த போது, எதிரே வந்த மூர்த்தி (வயது 45) என்பவரது வாகனத்தில் மோதியிருக்கிறார். இதனால் கலையரசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்சுக்கு போன் செய்திருக்கின்றனர். இதன்மூலம் அவர் சுரண்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் கலையரசன் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

Newly Wedded Groom Dies in a road accident near Tenkasi

அங்கே அவருக்கு முதலுதவி செய்யப்பட்ட நிலையில், பின்னர் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். இருப்பினும் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்ததால் மேல்கிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியில் கலையரசன் அனுமதிக்கப்பட்டார்.

அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கலையரசன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். திருமணமான ஒரு வாரத்தில் புதுமாப்பிள்ளை விபத்தில் மரணமடைந்த சம்பவம் சுரண்டை சுற்றுவட்டார பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also Read | ரங்கன் வாத்தியார் - கபிலனாக மாறிய தோனி, ஜடேஜா.. CSK அணி பகிர்ந்த மாஸான வீடியோ.. ஜடேஜா போட்ட தெறி கமெண்ட்..!

ACCIDENT, GROOM, ROAD ACCIDENT, TENKASI, NEWLY MARRIED

மற்ற செய்திகள்