"Long Drive போலாமா’.. புது மனைவியுடன் மாட்டு வண்டில ரைடு போன மாப்பிள்ளை !!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இன்றைய காலகட்டத்தில் திருமணத்தை சுற்றி நடக்கும் பல்வேறு விஷயங்கள், பெரிய அளவில் மக்கள் மத்தியில் வைரல் ஆகவும் செய்யும்.

"Long Drive போலாமா’.. புது மனைவியுடன் மாட்டு வண்டில ரைடு போன மாப்பிள்ளை !!

                             Images are subject to © copyright to their respective owners.

Also Read | ஆடுனது 6 மேட்ச், அதுல 4 மேட்ச் -ல இப்டி ஒரு மோசமான சாதனையா?.. பாகிஸ்தான் வீரருக்கு வந்த சோதனை!!

போட்டோ ஷூட், திருமண பத்திரிக்கை, திருமண மேடையில் கொடுக்கும் பரிசு பொருட்கள் என ஏராளமான விஷயங்கள் மிகவும் புதுமையாக நடைபெறும் பட்சத்தில் அது தொடர்பான வீடியோக்கள் அல்லது புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகி இணையதளவாசிகள் கவனத்தை பெறவும் செய்யும்.

அது மட்டுமில்லாமல், இப்போது எல்லாம் திருமணத்தை சுற்றி ஏராளமான புதுமையான விஷயங்களை பலரும் யோசனை செய்வதால், தினந்தோறும் எக்கச்சக்கமான திருமணம் தொடர்பான நிகழ்வுகள் வைரல் ஆவதையும் நாம் கவனித்திருப்போம். இந்த நிலையில் தற்போதும் அப்படி திருமணத்தை சுற்றி நடந்த ஒரு சம்பவம் தொடர்பான விஷயம் தான் இணையவாசிகள் கவனத்தை பெற்று வருகிறது.

ஈரோடு மாவட்டம், திண்டல் சக்திநகர் என்னும் பகுதியை சேர்ந்தவர் நிஷாந்த் பாலாஜி. மருத்துவராக பணியாற்றி வரும் இவருக்கும், வெட்டுக்காட்டு வலசை என்னும் பகுதியை சேர்ந்த பேஷன் டிசைனர் ரித்து என்பவருக்கும் திருமணம் நடத்த பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. அதன்படி சமீபத்தில் மேட்டுக்கடை பகுதியில் உள்ள மண்டபத்தில் வைத்து நிஷாந்த் மற்றும் ரித்து ஆகியோரின் திருமணமும் நடந்தது.

Newly wed groom take bride in bullock cart after marriage

Images are subject to © copyright to their respective owners.

பொதுவாக திருமணம் முடிந்த கையோடு, மணப்பெண்ணை உயர்ரக கார் உள்ளிட்ட வாகனங்களில் தனது வீட்டிற்கு மாப்பிள்ளை அழைத்து செல்வார். ஆனால், மாப்பிள்ளை நிஷாந்த் பாலாஜி, மனைவி ரித்துவை திருமணம் முடிந்த பிறகு மாட்டு வண்டியில் வீட்டிற்கு அழைத்து செல்ல முடிவு செய்துள்ளார். அதன்படி, மாட்டு வண்டி ஒன்று சிறப்பான முறையில் அலங்கரிக்கப்பட்டு அதில் மனைவி ரித்துவுடன் பயணம் மேற்கொண்டார் நிஷாந்த்.

மாட்டு வண்டியில் புது ஜோடி பயணம் மேற்கொண்டது அப்பகுதி மக்களை ஆச்சரியத்திலும் ஆழ்த்தி இருந்தது. மேலும் இந்த பயணம் வித்தியாசமானதாகவும், புதுவித அனுபவமாக இருந்ததாகவும் நிஷாந்த் மற்றும் ரித்து ஆகியோர் தெரிவித்துள்ளனர். பாரம்பரியம் மாறாமல் புதுமண தம்பதி மாட்டு வண்டியில் பயணம் செய்தது பலரது பாராட்டுக்களையும் பெற்றுக் கொடுத்து வருகிறது.

Also Read | திருமண வாழ்க்கை.. "அதுல நான் தோத்துட்டேன், திரும்பவும் கல்யாணம் பண்ண நெனச்சா".. ஷிகர் தவான் ஷேரிங்ஸ்!!

NEWLY WED, GROOM, BRIDE, BULLOCK CART, MARRIAGE

மற்ற செய்திகள்