'பிரியாணி' பிரியர்கள் செம ஹாப்பி'...'நிரம்பி வழிந்த கூட்டம்'... கட்டுப்படுத்த வந்த போலீஸ்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பிரியாணிக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அதுவும் பத்து ரூபாய்க்கு பிரியாணி வழங்கினால் யாருக்கு தான் சாப்பிட ஆசை இருக்காது. இந்த சுவாரசியமான சம்பவம் நடைபெற்ற இடம் தேனி மாவட்டம் பெரியகுளம்.

'பிரியாணி' பிரியர்கள் செம ஹாப்பி'...'நிரம்பி வழிந்த கூட்டம்'... கட்டுப்படுத்த வந்த போலீஸ்!

தேனி மாவட்டத்தில் முரளி ரெஸ்டாரண்ட் என்ற புதிய உணவகம் ஒன்று திறக்கப்பட்டது. அதன் திறப்பு விழா சலுகையாக ஒரு பரோட்டா ஒரு ரூபாய்க்கும், பிரியாணி 10 ரூபாய்க்கும் கொடுக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்த பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள், முரளி ரெஸ்டாரண்டிற்கு படையெடுக்க ஆரம்பித்தனர். இதனால் ஹோட்டலில் கூட்டம் அலைமோத, போக்குவரத்து பாதிக்காத வகையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே இதுதொடர்பாக பேசிய ஹோட்டல் உரிமையாளர் ''பெரியகுளம் பகுதி மக்களில் பலருக்கு பிரியாணி என்பது பெரிய கனவாகவே இருக்கிறது. அது தற்போது நிறைவேறி இருக்கிறது. அதோடு திறப்பு விழா சலுகையாக குறைந்த விலையில் கொடுக்க நினைத்தோம். அதற்கு மக்கள் இவ்வளவு ஆதரவு கொடுப்பார்கள் என நினைக்கவில்லை. 7ஆயிரம் பிரியாணியும், 7 ஆயிரம் பரோட்டாவும் கொடுப்பதே இலக்கு. இறுதியில் அந்த எண்ணிக்கை சற்று அதிகமாயிருக்கும்'' என நிறைவுடன் கூறினார்.

BRIYANI, THENI, PAROTTA