RRR Others USA

மாடிக்கு போன புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு.. கல்யாணமாகி 15 வது நாளில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தருமபுரி அருகே திருமணமான 15 நாட்களில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மாடிக்கு போன புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு.. கல்யாணமாகி 15 வது நாளில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ..!

திருமணம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த சோமனூர் பகுதியைச் சேர்ந்த கவுரப்பன். இவருடைய மகன் மதன் குமார் (35) என்பவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த சரசு என்பவரின் மகள் பிரியங்கா (31) என்பவருக்கும் கடந்த 16 ஆம் தேதி பிரசித்திபெற்ற வெள்ளிச்சந்தை பெருமாள் கோவிலில் திருமணம் நடைபெற்றது.

Newly married women took wrong decision near Dharmapuri

 இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி பிரியங்கா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றதாகவும் அப்போது அவரது சகோதரர் ஓடிச்சென்று பிரியங்காவை காப்பாற்றியதாகவும் சொல்லப்படுகிறது.

விருந்து

இதனை அடுத்து காரிமங்கலம் அடுத்து உள்ள அனுமந்தபுரம் பகுதியில் உள்ள தங்களது உறவினர் ஒருவரது வீட்டிற்கு விருந்திற்காக சென்றுள்ளனர் மதன் குமார் - பிரியங்கா தம்பதி. அப்போது அந்த வீட்டில் இருந்த மாடிக்கு பிரியங்கா சென்றிருக்கிறார். கொஞ்ச நேரத்தில் திடீரென அலறல் சத்தம் கேட்டதால் அதிர்ச்சியில் அனைவரும் ஓடிச்சென்று பார்த்திருக்கின்றனர்.

Newly married women took wrong decision near Dharmapuri

அப்போது பிரியங்கா மாடியில் இருந்து கீழே குதித்தது தெரியவந்திருக்கிறது. கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த பிரியங்காவை உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முன்னரே பிரியங்கா மரணமடைந்துவிட்டதாக தெரிவித்து உள்ளனர்.

வழக்கு பதிவு

இது தொடர்பாக காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் வழக்கு பதிவு செய்து, புது மணப்பெண்ணின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

திருமணமான 15 நாட்களில் புது மணப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

தற்கொலை தீர்வல்ல

எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.

மாநில உதவிமையம் : 104 .

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

DHARMAPURI, POLICE, MARRIAGE, தருமபுரி, திருமணம், போலீஸ்

மற்ற செய்திகள்