‘கல்யாணம் ஆகி 15 நாள்தான் ஆச்சு’.. நண்பன் பிறந்தநாளை கொண்டாட சென்ற புதுமாப்பிள்ளைக்கு நடந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நண்பன் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | அடுத்தடுத்து தீப்பிடிக்கும் E-bike.. ‘அதை செக் பண்ணியே ஆகணும்’.. மத்திய அரசு எடுத்து அதிரடி முடிவு..!
திண்டுக்கல் மாவட்டம் அனுமந்த நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி, இவரது மகன் பிரபாகரன். இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு தென்றல் என்ற பெண்ணுடன் திருமணம் ஆகியுள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு ஏர்போர்ட் நகர் பகுதியில் தனது நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக பிரபாகரன் சென்றுள்ளார். அப்போது திடீரென அங்கு வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், பிரபாகரனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளது. இதை தடுக்க வந்த அவரது நண்பர்கள் இருவரையும் அவர்கள் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
மூன்று பேரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், அவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பிரபாகரனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதா? என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் ஆன 15 நாளில் புதுமாப்பிள்ளைக்கு மர்மநபர்களால் நேர்ந்த கொடுமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்