புதுத்தாலியோட 'வாசம்' கூட போகல...திருமணமாகி 22 நாட்களில் 'உயிரிழந்த'... 24 வயது புது மாப்பிள்ளை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமணமான 22 நாட்களில் 24 வயது புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன்(24). கடந்த மாதம் 28-ம் தேதி இவருக்கு திருமணம் நடந்தது. சில நாட்களுக்கு முன் மூச்சுத்திணறலால் பிரபாகரன் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். தொடர்ந்து கொரோனா அறிகுறி இருந்ததால் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
அங்கு அவருக்கு பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு, மூச்சு திணறலால் அவதிப்பட்டதால் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை பிரபாகரன் இறந்தார். இது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்