'நானோ’ துகள்கள் சார்ந்த ‘ஆன்டிமைக்ரோபையல் பூச்சு...' 'கொரோனா' வைரசை செயலிழக்க செய்யும் 'புதிய தொழில்நுட்பம்...' 'சென்னை ஐ.ஐ.டி.யின் அசத்தல் கண்டுபிடிப்பு...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரசை செயலிழக்க செய்ய புதிய தொழில்நுட்பத்தை சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடித்துள்ளது.
கொரோனா ஒழிப்பு பணியில் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க, நாட்டின் பல்வேறு நிறுவனங்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. சென்னை ஐ.ஐ.டி.யும் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், நானோ’ துகள்கள் சார்ந்த ‘ஆன்டிமைக்ரோபையல்’ மூலம் கொரோனா வைரசை செயலிழக்க செய்யும் மேற்பூச்சு பொருளை தயாரிக்கும் பணியில் ஐ.ஐ.டி. தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்த மேற்பூச்சு பொருளை, ‘என்.95’ ரக முககவசம், அறுவை சிகிச்சை முககவசம், உடல் முழுவதும் அணியப்படும் கவசங்கள், உணவு பொருட்களை பொட்டலம் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் துணிகளில் பூசலாம்.
இந்த மேற்பூச்சில் வைரஸ் படும் பட்சத்தில், அவை தானாகவே செயலிழந்துவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ‘ஆன்டிமைக்ரோபையல்’ மேற்பூச்சு பூசப்பட்ட துணிகளை 60 முறை சலவை செய்து மீண்டும் பயன்படுத்தி கொள்ளலாம்.
‘மியூஸ் வேரேபிள்ஸ்’ என்ற எந்திரம் மூலம் 100 மீட்டர் நீள துணியில் ஒரு சில நிமிடங்களில் ‘ஆன்டிமைக்ரோபையல்’ மேற்பூச்சுகளை பூசி விடலாம். காட்டன், பாலிஸ்டர் உள்ளிட்ட எந்த துணிகளிலும் இந்த மேற்பூச்சுகளை பூசலாம். இந்த மேற்பூச்சுக்கு நச்சுத்தன்மை கிடையாது. அதனால் முககவசம், உடல் கவசங்களை தயாரிக்க பாதுகாப்பாக பயன்படுத்தலாம் என ஐஐடி தெரிவித்துள்ளது. இந்த எந்திரம் இன்னும் ஒரு சில நாட்களுக்குள் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.