'சென்னை- ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள்...' திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருகிறது...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அ. திங்கட்கிழமை முதல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை காய்கறி கடைகள், மளிகை கடைகள் செயல்படலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆ. திங்கட்கிழமை முதல் டீ கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இ. நாளை நள்ளிரவுடன் முழு ஊரடங்கு முடிவடையும் நிலையில் திங்கட்கிழமை முதல் புதிய கட்டுப்பாடுகள் - தளர்வுகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈ. திங்கட்கிழமை முதல் டீ கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டாலும் பார்சல் முறையில் மட்டுமே விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உ. சென்னையில் திங்கட்கிழமை முதல் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை உணவகங்களில் பார்சல் முறையில் மட்டுமே விற்பனை செய்ய அனுமதி
ஊ. சென்னையில் திங்கள் முதல் ஆன்லைன் உணவு டெலிவரிக்கு இரவு ஒன்பது மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எ. வணிக வளாகங்கள் தவிர்த்த மற்ற ஷோரூம்கள், பெரிய கடைகள் ஏற்கனவே அறிவித்த வழிமுறைகளுடன் செயல்படலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏ. வணிக வளாகங்கள் தவிர்த்த மற்ற ஷோரூம்கள், பெரிய கடைகள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஐ. சென்னையில் மற்ற செயல்பாடுகளை பொறுத்தவரை 19.06.2020க்கு முந்தைய தளர்வுகள், கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
TRENDING NEWS
மற்ற செய்திகள்
LATEST VIDEOS