'பிளாஸ்டிக் பாட்டில்ல தண்ணீர் வேண்டாம்'...'ஏடிஎம் மூலம் தண்ணீர்'... அசத்தல் முயற்சி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிளாஸ்டிக்யை ஒழிக்கும் விதமாக ஏடிஎம் மூலம் தண்ணீர் அளிக்கும் முறையை, நீலகிரி மாவட்ட நிர்வாகம் முன்னெடுக்கவுள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் சுதந்திர தினமான வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. அதோடு அதற்கு மாற்றான முன்னேற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் கையில் எடுத்துள்ளது. பரலியார், குன்னூர், உதகை, கூடலூர் உள்ளிட்ட இடங்களில், சுற்றுலா வரும் பயணிகளுக்கு குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், ஏடிஎம்கள் மூலம் தண்ணீர் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சுற்றுலா பயணிகளுக்கு தண்ணீர் தேவைபட்டால் ஏடிஎம்மில் 5 ரூபாய் காயினை செலுத்தி, ஒரு லிட்டர் தண்ணீரைப் பெற்று கொள்ளலாம். இதன் மூலம் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை முற்றிலும் தடுக்க முடியும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.