வைரலாகும் திருமண பேனர்.. ஜாதக வடிவில் நண்பர்கள் புகைப்படம்.. "அதுலயும் 90 ஸ் கிட்ஸ்ங்க கடைசி'ல போட்ட லைன் இருக்கு பாருங்க"

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இன்றைய காலகட்டத்தில் பெரிய அளவில் இணையத்தில் வைரலாகும் விஷயம் என்றால், அது திருமணத்தை சுற்றி நடக்கும் விஷயங்கள் தான்.

வைரலாகும் திருமண பேனர்.. ஜாதக வடிவில் நண்பர்கள் புகைப்படம்.. "அதுலயும் 90 ஸ் கிட்ஸ்ங்க கடைசி'ல போட்ட லைன் இருக்கு பாருங்க"

Also Read | அடிக்கடி திட்டிய அப்பா.. மகன் எடுத்த விபரீத முடிவு.. கதறிய தாய்.. "கடைசி'ல அவங்களும்".. நெஞ்சை நொறுக்கும் சோகம்!!

திருமணம் என்பது, மணமக்கள் இருவரின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான ஒரு நாளாக பார்க்கப்படுகிறது. இதனால், அப்படிப்பட்ட ஒரு முக்கியமான தினத்தை இன்னும் நினைவு மிக்க ஒரு தருணமாக மாற்ற பல்வேறு அசத்தலான ஆலோசனைகளையும் புகுத்தி, வித விதமான புதுமைகளையும் உண்டு பண்ணி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக, திருமணத்திற்கான அழைப்பிதழ் மற்றும் போட்டோஷூட் உள்ளிட்ட விஷயங்களுக்காக பார்த்து பார்த்து ஐடியாக்களை யோசித்து வருகின்றனர்.

வெறுமென நின்று போட்டோவுக்கு போஸ் கொடுப்பதை தாண்டி, அதில் என்ன க்ரியேட்டிவிட்டி செய்ய முடியும் என்பது தான் மணமக்களின் யோசனையாக உள்ளது. அதே போல, சமீப காலத்தில்  நிறைய திருமண அழைப்பிதழ்கள் மற்றும் திருமணம் பேனர்கள் கூட பெரிய அளவில் வைரலாகி இருந்தது. மாத்திரை டப்பாவில் திருமண அழைப்பிதழ், மீம்ஸ் கன்டென்ட்டுகளுடன் திருமண அழைப்பிதழ், நண்பர்கள் சேர்ந்து மாப்பிள்ளைக்கு வைத்த திருமண பேனர் என ஏகப்பட்ட விஷயங்கள், சமீப காலத்தில் பலரையும் வெகுவாக கவர்ந்திருந்தது.

new marriage banner by groom friends gone viral

அந்த வகையில், தற்போது தங்களின் நண்பனின் திருமண விழாவிற்கு சில இளைஞர்கள் சேர்ந்து பேனர் வைத்த விஷயம், பலரது கவனத்தையும் இணையத்தில் பெற்று வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நவீன்ராஜ் மற்றும் லாவண்யா ஆகியோரின் திருமணம் தொடர்பான பேனர் தான் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. மணமகனின் நண்பர்கள் வைத்த பேனரில், மணமக்கள்  புகைப்படத்துடன் திருமண தேதி, இடம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம்பெற்றுள்ளது. இதற்கு கீழே இடம்பெற்றிருக்கும் விஷயம் தான் பேனரின் ஹைலைட்.

new marriage banner by groom friends gone viral

மணமகனின் நண்பர்கள் தங்களின் புகைப்படம், பெயர், ராசி உள்ளிட்ட விஷயங்களை ஜாதக வடிவில் குறிப்பிட்டுள்ளனர். கூடவே, "கல்யாணத்துக்கு வாங்க, அடுத்த மாப்பிள்ளை நாங்க" என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. 90 ஸ் கிட்ஸ் திருமணம் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கு திருமணம் ஆகவில்லை என்பதை குறிப்பிட்டு இளைஞர்கள் பேனர் வைத்துள்ளதை பலரும் ஒரு நிமிடம் நின்று பார்த்து செல்கின்றனர்.

90 ஸ் கிட்ஸ்கள் பெரும்பாலானோருக்கு திருமணம் ஆகவில்லை என ஒரு கருத்து பரவலாக இருந்து வரும் நிலையில், அதனைக் குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ள இந்த பேனர் பற்றி பலரும் பலவிதமான கருத்துக்களை இணையத்தில் குறிப்பிட்டு வருகின்றனர்.

Also Read | "அவரு இறந்துட்டாரு".. உடல் உறுப்புகளை அகற்ற தயாரான மருத்துவர்கள்.. வேகமாக வந்த மனைவி சொன்ன பரபரப்பு விஷயம்!!

MARRIAGE BANNER, GROOM FRIENDS

மற்ற செய்திகள்