'ஆடி மாசம்' வீட்டுக்குப் போன 'புதுமனைவியின் பகீர் முடிவு'.. புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த 'சோகம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவாரூர் மாவட்டம் நாககுடியைச் சேர்ந்தவர் 19 வயதான கவுசல்யா. இவருக்கும், நாகை மாவட்டம், நாகூரை அடுத்த அருவிழமங்கலம் ஆற்றங்கரைத் தெருவைச் சேர்ந்த தங்கராசுவின் 35 வயதான ‘விவசாயி’ பாக்கியராஜ் என்பவருக்கும் கடந்த 40 நாட்களுக்கு முன்னர் திருமணம் ஆகியுள்ளது.
ஆனால், கவுசல்யாவோ ஏற்கனவே ஒருவரை காதலித்து வந்துள்ளதாகவும், அவர் தன் காதலை தன் பெற்றோரிடம் தெரிவித்ததும் பெற்றோர்கள் கவுசல்யாவின் காதலை ஏற்க மறுத்து பாக்கியராஜூவுக்கு திருமணம் செய்துவைத்துள்ளனர். ஆனால் திருமணம் ஆன கையோடு, ஆடி மாதம் என்பதால் கவுசல்யாவின் பெற்றோர் கவுசல்யாவை கணவரிடம் இருந்து பிரித்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.
ஆனால் கவுசல்யாவை கணவரிடம் இருந்து பிரித்த பெற்றோர்கள், அவளது பழைய காதலனை கவுசல்யா சந்திக்கச் சென்றதை கவனிக்கத் தவறிவிட்டனர். கவுசல்யா, தன் காதலனை சந்தித்து பேசி, வீட்டை விட்டு ஓடிச் சென்று வாழலாம் என்று முடிவெடுத்து அதை செயல்படுத்தியுள்ளார்.
இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட பாக்கியராஜ் பூச்சிமருந்து விஷம் குடித்து, பின்ன காப்பாற்றப்பட்டு எனினும் சிகிச்சைப் பலனின்றி தற்கொலை செய்துகொண்டார்.