'எது, 'சாக்லேட்' சாப்பிட்டா 'லவ்' ஆக்டிவேட் ஆகுமா?!'... இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சாக்லேட் சாப்பிட்டால் காதல் உணர்வு அதிகரிக்கும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

'எது, 'சாக்லேட்' சாப்பிட்டா 'லவ்' ஆக்டிவேட் ஆகுமா?!'... இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!

பிப்ரவரி 14ம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. முன்பெல்லாம் காதலர் தினம் என்பது ஒரு நாள் கொண்டாட்டமாகவே இருந்தது. ஆனால், இப்பொழுதோ ஏழு நாள் திருவிழாவாகிவிட்டது. அவற்றில் சாக்லேட் தினம், மிகவும் பிரபலமானது.

இந்நிலையில், சாக்லேட் சாப்பிட்டால் 'காதல் ஹார்மோன்' ஆக்டிவேட் ஆகி, காதல் வெற்றி அடைந்துவிடும் என்ற நம்பிக்கை காதலர்கள் மத்தியில் நிலவி வருகிறது. உண்மையில் சாக்லேட்டிற்கு அந்த சூப்பர் பவர் இருக்கிறதா என்பதைப் பற்றி பிரிட்டிஷ் நாளிதழ் சில ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

வேறு எந்தப் பொருளும் பிரதிபலிக்க முடியாத மகிழ்ச்சியின் உணர்வை வெளிப்படுத்தக்கூடிய ஏராளமான சேர்மங்களைக் கொண்ட பொருள், சாக்லேட். அளவாகச் சாப்பிட்டால் இதயதுக்கு மிகவும் நல்லது. சாக்லேட் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 'கோக்கோ' பொருளில், இருதய நோய், புற்று நோய் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கக்கூடிய ஆன்ட்டி-ஆக்சிடன்ட் பாலிஃபீனால்ஸ் (antioxidant polyphenols) இருக்கிறது.

சாக்லேட்டில் இருக்கும் கஃபைன் (caffeine) மற்றும் தியோபுரோமைன் (Theobromine) ரசாயனங்கள், மத்திய நரம்பு மண்டலத்தையும் மூளையில் ரத்த ஓட்டத்தையும் தூண்டுகின்றன. மேலும், உடல் சோர்வைக் குறைத்து, புதிய சிந்தனை பிறப்பதற்கும் அடித்தளமாக அமைகின்றன. இவ்விரண்டும், ஒட்டுமொத்த மனநிலையையும் மேம்படுத்தி, சுவாசம் மற்றும் இருதய செயல்பாடுகளை சீராக்குகின்றன.

மேலும், பெரும்பாலான உளவியக் நிபுணர்கள், தேர்வெழுதச் செல்லும் குழந்தைகளை சாக்லேட் சாப்பிடச் சொல்வதை நாம் பார்த்திருப்போம். அதற்கு காரணம், நேர்மறை எண்ணங்களை கொடுக்கக்கூடிய செரோட்டனின் ரசாயன சுரப்பை அதிகரிக்கச் செய்யும் தன்மை சாக்லேட்டிற்கு உள்ளது. இது பாலியல் எண்ணத்தை தூண்டும் ரசாயனமும் கூட. சரியான தூக்கம், சீரான பசி போன்றவற்றிற்கும் இந்த செரோட்டனின் தான் காரணம். இவற்றின் சுரப்புக் குறைவதால் தான், மன அழுத்தம் ஏற்படுகிறது.

மேலும், பெண்களின் மாதவிடாய் காலத்தில், இந்த செரோட்டனின் சுரப்பு குறையும் வேளைகளில், சாக்லேட் சிறந்த மருந்தாகவே செயல்படுகிறது. எனவே, சிங்கிளா இருந்தாலும், கமிட்டடாக இருந்தாலும் சாக்லேட் சாப்டுங்க, மகிழ்ச்சியா இருங்க.

இனிய சாக்லேட் டே நண்பர்களே!

CHOCOLATE, SPECIAL