'தென் தமிழகத்தை நெருங்கும்’... ‘புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி’... 'எங்கெல்லாம் மழை பெய்யும்?’... ‘இந்திய வானிலை மையம் தகவல்’...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகம் மற்றும் கேரளாவில் டிசம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் கன மழை முதல் மிக கனமழை இருக்கும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல், பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில், மற்றொரு புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி சனிக்கிழமை உருவானது. இது அடுத்த 36 மணிநேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 2 ஆம் தேதி தென் தமிழக கடற்கரையை நெருங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டிசம்பர் 1,2,3 தேதிகளில் தெற்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், தெற்கு கேரளா, ஆந்திரத்தின் தென் கடலோரப் பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, டிசம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில், தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை இருக்கும் என கூறப்பட்டுள்ளது. டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிக கனமழை அல்லது அதீத கனமழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்