"மொத பொண்டாட்டி குடும்பத்துக்கே எல்லாம் பண்றாரு"... கடுப்பான 'மருமகன்'... இறுதியில் 'மாமனாருக்கு' நேர்ந்த 'கொடூரம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியிலுள்ள மோடமங்கலம் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமணி. ராஜாமணிக்கு மொத்தம் இரண்டு மனைவிகள். இதில் முதல் மனைவிக்கு ஒரு மகளும், இரண்டாவது மனைவிக்கு இரண்டு மகள்களும் உள்ளனர். மூன்று மகள்களுக்கும் திருமணம் முடிந்து விட்டது.

இதில் இரண்டாவது மனைவியின் இளைய மகளின் கணவர் பெயர் நல்லமுத்து. இவருக்கும் இவரது மாமனார் ராஜாமணிக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மூத்த மனைவியின் குடும்பத்திற்கு மட்டுமே பணம் கொடுத்து உதவி செய்வதாகவும், இரண்டாவது மனைவியின் குடும்பத்திற்கு பண உதவி செய்யவில்லை என்று நல்லமுத்து ராஜாமணியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த நல்லமுத்து கத்தி எடுத்து மாமனாரை சரமாரியாக குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜாமணியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், மாமனாரை கொலை செய்ததன் பெயரில் நல்லமுத்து போலீஸ் நிலையம் சென்று சரணடைந்தார். இதுகுறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.