'வீழ்வேன் என்று நினைத்தாயோ'... மீண்டும் திறக்கப்பட்ட 'இருட்டுக்கடை' அல்வா... யார் ஸ்டார்ட் பண்ணிருக்காங்க பாருங்க!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

உலகப்புகழ் பெற்ற இருட்டுக்கடை அல்வா கடை 20 நாட்களுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது.

'வீழ்வேன் என்று நினைத்தாயோ'... மீண்டும் திறக்கப்பட்ட 'இருட்டுக்கடை' அல்வா... யார் ஸ்டார்ட் பண்ணிருக்காங்க பாருங்க!

100 வருடங்களுக்கும் மேலாக நெல்லையில் இயங்கி வந்த அல்வா கடையின் உரிமையாளர் ஹரிசிங் கொரோனா தொற்றால், கடந்த 25-ம் தேதி மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து கடையின் முன்பு கிருமிநாசினி தெளித்து பின்னர் கடை மூடப்பட்டது.

இந்த நிலையில் ஹரி சிங்கின் மகள் வழிப்பேரன் சூரஜ்சிங் மீண்டும் நேற்று(14.7.20) முதல் கடையை மீண்டும் திறந்து நடத்தத் தொடங்கி இருக்கிறார். இதுபற்றி சூரஜ்சிங், ''கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மாஸ்க் மற்றும் கையுறை அணிந்து அனைவரும் பணியாற்றுகிறோம். எங்கள் கடையில் ஏற்கெனவே இருந்த தரமும் ருசியும் தொடர்ந்து இருக்கும். அதில் எந்தச் சமரசமும் செய்து கொள்ள மாட்டோம்,'' என தெரிவித்து இருக்கிறார்.

மற்ற செய்திகள்