"ஏ கோபி..!!! எவ்ளோ தைரியம் இருந்தா கேள்வி கேப்ப" .. என்ன பொசுக்குனு இப்படி பேசிட்டாங்க 😅 ட்ரெண்ட் ஆன ப்ரோமோ.. Neeya Naana

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி சமூக அளவில் அனைத்து தரப்பினரும் பார்க்கக்கூடிய மற்றும் அவர்களின் சிந்தனையை தூண்டக்கூடிய விவாத நிகழ்ச்சியாக பல ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து வருகிறது.

"ஏ கோபி..!!! எவ்ளோ தைரியம் இருந்தா கேள்வி கேப்ப" .. என்ன பொசுக்குனு இப்படி பேசிட்டாங்க 😅 ட்ரெண்ட் ஆன ப்ரோமோ.. Neeya Naana

Image Credit : Vijay Television

இதில் விவாதிக்கப்படும் பல டாபிக்குகள், பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் கூட பேசு பொருளாக மாறும். மேலும் இந்த நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக பிரபல தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார்.

இரு தரப்பிலான கருத்துகளையும் கேட்டுக் கொண்டு, அதில் சரியாக பாய்ண்ட்டுகளை எடுத்துரைத்து பேசுவதன் மூலம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருபவர் கோபிநாத். நீயா நானா நிகழ்ச்சி சில நேரம் கலகலப்பாகவும், சுவாரஸ்யம் கலந்தும் செல்லும். மறுபக்கம், தீப்பறக்கும் விவாதங்கள் கூட உருவாகி பார்ப்பவர்கள் பலரையும் கூட நிகழ்ச்சியுடன் ஒன்றி போக வைக்கும். அதே போல, சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகள் பற்றி ஒருபுறமும், அதே வேளையில் ஜாலியான டாபிக்குகளை கையில் எடுத்து அதனை சுற்றி நடைபெறும் விவாதங்களும் நீயா நானா நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது நீயா நானா தொடர்பான ப்ரோமோ காட்சிகள் அதிக வைரலாகி வருகிறது. இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு பக்கம் 90 களில் அறிமுகமாகி தற்போது வரை நடித்து வரும் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் மறுபக்கம் இந்த தலைமுறை சின்னத்திரை நடிகர், நடிகைகளும் அமர்ந்திருக்கின்றனர்.

Neeya Naana Gopinath new episode serial actors and actress

Image Credit : Vijay Television

அந்த சமயத்தில் இரு பக்கம் இருக்கும் நடிகைகளும் மாறி மாறி சீரியலில் பேசுவது போல ஆவேசமாக வசனங்களை பேசியபடி இருக்கின்றனர். ஏட்டிக்கு போட்டிக்காக இந்த சுற்று போகும் சூழலில் ஒருபுறம் இருக்கும் நடிகைகளில் ஒருவர், "ஏ கோபி, எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்ட கேள்வி கேப்ப" என ஆவேசமாக கூறுவது போல ப்ரோமோவில் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இது கோபி என்னும் கதாபாத்திரத்தை குறிப்பிட்டு கூட பேசி இருக்கலாம் என தெரியும் நிலையில், ப்ரோமோவில் காட்டப்படும் கோபிநாத் ரியாக்ஷனும் அதிக கவனம் பெற்று வருகிறது.

Neeya Naana Gopinath new episode serial actors and actress

 Image Credit : Vijay Television

 

NEEYA NAANA, GOPINATH

மற்ற செய்திகள்