"நான் கூலி வேலை செய்றேன்"... "கடவுள் செய்யாததை முதல்வர் செய்திருக்கிறார்"!.. கண்ணீருடன் முதல்வர் காலில் விழுந்த மாணவியின் தந்தை!.. நெகிழ்ச்சி சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் 405 பேர், 7.5 சதவிகித இட ஒதுக்கீடு மூலம் மருத்துவப் படிப்பிற்கு தேர்வாகினர். இந்த கலந்தாய்வின் போது, மாணவியின் தந்தை ஒருவர் முதல்வர் காலில் விழுந்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

"நான் கூலி வேலை செய்றேன்"... "கடவுள் செய்யாததை முதல்வர் செய்திருக்கிறார்"!.. கண்ணீருடன் முதல்வர் காலில் விழுந்த மாணவியின் தந்தை!.. நெகிழ்ச்சி சம்பவம்!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய மாணவர்கள், "அரசின் நீட் பயிற்சி மையத்தில் படித்தேன். 7.5 இட ஒதுக்கீடு மூலம் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ளது. இட ஒதுக்கீடு கொண்டுவந்த முதல்வருக்கு நன்றி" என பலரும் சொல்லியிருந்தனர்.

அதில் ஒரு மாணவியின் தந்தை, "என் மகள் பிறந்த நாளிலிருந்து அவளை டாக்டராக்கி பார்க்கணும்னு விரும்பினேன். ஆனாலும், குடும்ப சூழல் காரணமா அரசு பள்ளியில தான் அவளை படிக்க வெச்சேன்.

ஒவ்வொரு நாளும் என் மகள எப்படி மருத்துவராக்க போறேன்னு நினைச்சு இருக்கிறேன். முதல்வர் ஐயா அரசு பள்ளி மாணவர்களுக்காக ஒதுக்கிய 7.5 சதவிகித இட ஒதுக்கீடு மூலம் என் மகளுக்கு மருத்துவ இடம் கிடைச்சிருக்கு.

எங்க அப்பா, தாத்தா படிக்காதவங்க. இப்போ என் பொண்ணு டாக்டரு. இதை செய்த முதல்வருக்கு நன்றி" என சொல்லி முதல்வரின் கால்களை கண்ணீர் மல்க தொட்டு வணங்கினார். அதேபோல் அந்த மாணவியும் முதல்வர் காலில் விழுந்து வணங்கினார்.

இச்சம்பவம், அங்கிருந்த அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் பெற்றோர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

மற்ற செய்திகள்