'பொண்ணுங்கள கொலை பண்ணிடுவேன்'... 'அதுக்க அப்பறோம்'...உறையவைக்கும் 'சைக்கோவின் வாக்குமூலம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெண்களை கொலை செய்து, சடலத்துடன் உடலுறவு கொள்ளும் வினோத சைக்கோ கொலையாளி கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலை 9ம் தேதி அரக்கோணம் பகுதியில் நிகழ்ந்த மரணம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நிர்மலா என்ற பெண் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில் அவரது மரணத்தில் இருந்த மர்மம் விலகாமல்இருந்தது. அதனைத்தொடர்ந்து நிர்மலா கொல்லப்பட்டு 7ஆம் நாள் அதாவது ஜூலை 16ம் தேதி காலையில், அவரது நெருங்கிய தோழியான இந்திராணி வீட்டருகில் உள்ள தண்டவாளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இது காவல்துறைக்கு பெரும் சவாலாக மாறியது.
இதனிடையே இருநாட்களுக்கு முன்பு தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள நகரியில், ஆனந்த் என்ற நபர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது காவல்துறையிடம் அளித்திருக்கும் வாகும்மூலம் தான் பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. ஆந்திர மாநிலம் நகரியில் கடந்த வாரம் சரோஜா என்ற பெண் கொலை செய்யப்பட்ட நிலையில் வீட்டில் கிடந்தார். இந்தக் கொலை வழக்கில் ஆனந்தை பிடித்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில் சரோஜாவை அவரது கணவர் சொன்னதால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார்.
ஆனந்த் தங்கியிருந்த அறையைப் போலீசார் சோதனையிட்ட போது அங்கு தங்க நகைகள் கிடைத்தன. அதுகுறித்து போலீசார் விசாரித்த போதுதான், அரக்கோணத்தில் நிர்மலா கொலையின் மர்ம முடிச்சுக்களுக்கு விடை கிடைத்தது. அரக்கோணத்தில் சவுண்ட் சர்வீஸ் கடை ஒன்றில் வேலைபார்த்து வந்த ஆனந்துக்கும் இந்திராணிக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இந்திராணியின் நெருங்கிய தோழியான நிர்மலா உடன் அவருக்கு அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திராணி அவ்வப்போது ஆனந்திடம் கூறி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பிரச்சனை பெரிதாக, நிர்மலாவை கொலை செய்யும் முடிவுக்கு வந்த இந்திராணி, அதுகுறித்து ஆனந்திடம் கூறியுள்ளார். இதையடுத்து ஒருநாள் நிர்மலாவை சந்தித்த ஆனந்த் அவரிடம் 2000 ரூபாய் கொடுத்து தன்னுடன் உல்லாசமாக இருக்க வரும்படி அழைத்துள்ளார். ஆத்திரமடைந்த நிர்மலா, ஆனந்தின் கன்னத்தில் அறைந்து எச்சரித்து அனுப்பியுள்ளார்.
இதனால் ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த ஆனந்த் கடந்த ஜூலை 9-ம் தேதி இரவு வழக்கம்போல் இந்திராணி வீட்டிற்கு சென்றுள்ளார். இந்திராணியின் ஆலோசனைப்படி அவரது வீட்டில் இருந்து ஏணி மூலம் நிர்மலா வீட்டிற்குள் குதித்துள்ளார். அங்கு தனியாகத் துாங்கிக் கொண்டிருந்த நிர்மலாவின் தலையில் அம்மிக் கல்லைத் துாக்கிப் போட்டுக் கொலை செய்துள்ளார்.பின்பு அவரிடம் இருந்த தங்கச் சங்கிலி, இரண்டு செல்போன்கள், இருசக்கர வாகனத்தின் சாவி ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தலைமறைவானார்.
இதையடுத்து போலீசார் தங்களின் விசாரணையை தீவிரப்படுத்த விசாரணை கெடுபிடி தாங்க முடியாமல் 7ம் நாள் இந்திராணி தற்கொலை செய்து கொண்டார். இதனால் அரக்கோணம் பக்கம் வராமல் நகரியில் பதுங்கிய ஆனந்த் சரோஜா என்ற பெண்ணையும் கொலை செய்துள்ளார். இந்நிலையில் காவல்துறையிடம் சிக்கிய ஆனந்த் அளித்த வாக்குமூலம் அவரது கொடூரமான மறுபக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
மனிதர்களுக்கு மிக அரிதிலும் அரிதாக வரும் நெக்ரோஃபீலியா என்ற நோயால் பாதிக்கப்பட்டவர் தான் ஆனந்த். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பிணத்துடன் உடலுறவு கொண்டு அதில் ஆனந்தமடைவார்கள். இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஆனந்த், நகரியில் தான் கொலை செய்த சரோஜா என்ற பெண்ணின் சடலம் மற்றும் நிர்மலாவின் சடலத்துடன் உறவு கொண்டதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். நெக்ரோஃபீலியா நோயை மையக் கருவாகக் கொண்டு ஆங்கிலம், ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்கள் வெளிவந்து உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளன.
இதனிடையே அரக்கோணம் நகரில் சவுண்ட் சர்வீஸ் கடையில் ஆனந்த் வேலை பார்த்தபோது அதன் உரிமையாளரின் மகன் 2015-ம் ஆண்டு கடத்தப்பட்டார். இன்று வரை அவர் மீட்கப்படவில்லை. அந்த சிறுவனை ஆனந்த் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.