‘இங்கெல்லாம் பட்டாசு வெடிக்கத் தடை’... ‘திருச்சி, தூத்துக்குடியிலும்’... ‘பசுமை தீர்ப்பாயம் உத்தரவு’... 'காரணம் இதுதான்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காற்று மாசு அதிகமாக உள்ள மாநகரங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிப்பதாகத் தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
காற்று மாசு உயர்வால் கொரோனா பாதிப்பு அதிகமாகும் என்றும், இதனால் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பல்வேறு மாநிலங்கள் சார்பில் முறையிடப்பட்டது. இந்நிலையில், 'நாடு முழுவதும் காற்று மாசு அதிகமாக உள்ள மாநகரங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிப்பதாக’ தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
காற்று மாசு, மிக மிக மோசமான பிரிவு மற்றும் மோசமான பிரிவு பதிவாகும் நகரங்கள், மாநகரங்களில் பட்டாசு வெடிக்க முழுமையாக தடை விதிக்க வேண்டும். நவம்பர் 9 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தடையை அமல்படுத்த வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவை அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் அனுப்பி தீவிரமாக செயல்படுத்த வேண்டும் எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே, ராஜஸ்தான், ஒடிசா, சிக்கிம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் காற்று மாசு காரணமாக பட்டாசு வெடிக்க இந்த ஆண்டு தடை விதித்துள்ளது. இதனால் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
மற்ற இடங்களில் இரண்டு மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சி, தூத்துக்குடி நகரங்களில் பசுமைப் பட்டாசுகள் மட்டுமே வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லி காவல்துறையினர் தடையை மீறி தேசிய தலைநகரில் பட்டாசுகளை விற்றதாக ஏழு பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கிட்டத்தட்ட 600 கிலோ பட்டாசுகளை மீட்டனர்.
மற்ற செய்திகள்