“வாய் கட்டப்பட்டு... நிர்வாணமாக கிடந்த ‘பெண்’ சடலம்... திடீர் திருப்பமாக, ‘17 வயது’ சிறுவன் கைது!” - பதற வைக்கும் பின்னணி!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகேயுள்ள கிராமம் ஒன்றை சேர்ந்தவர் விவசாயி நடேசன். இவரது மனைவி தீபா. இந்த தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் துணி துவைத்து விட்டு மாடு மேய்த்து விட்டு வருவதாக கூறி வீட்டில் இருந்து தீபா கிளம்பி அருகிலுள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. தொடர்ந்து, அவரை பல இடங்களில் நடேசன் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தேடியுள்ளனர். மறுநாள் காலை கீரைக்காடு வனப்பகுதியில் தீபாவின் உடல் கிடந்தது. உடலில் பல்வேறு இடங்களில் ரத்தக்காயங்களுடன், வாயில் துணி வைத்து கட்டப்பட்டு, நிர்வாண நிலையில் கிடந்தார். இதனைக் கண்டு நடேசன் கதறியழுத நிலையில் இந்த சம்பவம் அங்குள்ளவர்களிடையே கடும் பதற்றத்தை உருவாக்கியது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வேண்டி அனுப்பி வைத்தனர். அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் கருதப்பட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், தீபாவின் செல்போன் தொலைந்து போன நிலையில், அதனை திண்டூர்நாடு ஊராட்சி தென்னங்காடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து அவனிடம் நடந்த விசாரணையில், தான் தீபாவை கற்பழித்து பின் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். தீபா தனியாக காட்டுப் பக்கம் செல்வதைக் கண்ட அந்த சிறுவன், தீபாவின் பின்னால் தொடர்ந்து சென்று அவரை தான் ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளார். தீபா மறுக்கவே, அவரை வலுக்கட்டாயமாக பிடித்து வைத்து, அடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். பின், அவரை அடித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து சிறுவன் தப்பித்துச் சென்றுள்ளான்.
மேலும், தீபாவின் தொலைபேசியை பயன்படுத்தி யாரிடமோ சிறுவன் பேசியுள்ளான். தொடர்ந்து அதனை கொண்டு போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுவன் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
TRENDING NEWS
மற்ற செய்திகள்
LATEST VIDEOS