என் மேல 'கடன்' இருக்குனு தெரிஞ்ச உடனே 'ஷாக்'கா இருந்துச்சு...! வெள்ளையறிக்கை வெளியானதை அடுத்து... முதல்நபராக செய்த 'வியக்க' வைக்கும் காரியம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர் திரு பழனிவேல் தியாகராஜன் அவர்கள் 2020-21 ஆண்டிற்கான வெள்ளையறிக்கையை நேற்று (09-08-2021) வெளியிட்டார்.
அதில், தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் சுமார் ரூ.2,69,976 கடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கை தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று தான் சொல்லவேண்டும்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த காந்தியவாதி ரமேஷ் தியாகராஜன் என்பவர் செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தன் குடும்பத்தின் மீது இருந்த ரூ.2,69,976 கடனை காசோலை மூலம் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் கோட்டை குமாரிடம் இன்று (10.08.2021) நேரில் சந்தித்து வழங்க வந்துள்ளார்.
அதோடு, ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தின் மீதுள்ள கடன் தொகையை கட்டுவதற்கு முன்வர வேண்டும், தமிழ்நாடு அரசின் கடனை முழுவதுமாக அடைக்க வேண்டும் என விரும்புவதாக கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், இந்தக் கடனை செலுத்த முன்வரும் வசதியற்ற, வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு அரசு கடன் கொடுத்து சுய தொழில் செய்து தமிழ்நாட்டின் பொருளாதாரத்தையும், தனி நபருடைய வருமானத்தையும் வறுமையையும், ஏழ்மையையும் போக்குவதற்கு வழி செய்யவேண்டும் எனவும் குறிப்பிடுள்ளார்.
மற்ற செய்திகள்