"பந்தயத்துக்கு நாங்க வரலாமா?".. 20 நிமிசத்துல இத்தனை கிலோ பிரியாணியா? அசராமல் சாப்பிட்டு 5000 ரூபாய் சம்பாதித்த மனிதர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இன்று நம்மில் பலருக்கும் பல விதமான உணவு வகைகள் ஃபேவரைட்டாக இருக்கும். அதிலும் பிரியாணி என்பது அதிகம் பேருக்கு பிடித்தமான உணவாகவும் இருந்து வருகிறது.

 

"பந்தயத்துக்கு நாங்க வரலாமா?".. 20 நிமிசத்துல இத்தனை கிலோ பிரியாணியா? அசராமல் சாப்பிட்டு 5000 ரூபாய் சம்பாதித்த மனிதர்..!

                                                                                                                           Image subjected to © copyright to the respective owner.

அதே போல, இந்த பிரியாணியை வீட்டில் உருவாக்கியும், வகை வகையான பிரியாணிகளை பிரபல உணவகங்களில் சென்று ருசி பார்க்கவும் செய்கின்றனர் ஏராளமானோர்.

அது மட்டுமில்லாமல், பிரியாணிக்கென்று பிரத்யேக ரசிகர்கள் கூட்டமும் உள்ளது. இதனால், அடிக்கடி பிரியாணி என்ற உணவுக்காக கடைகளில் கூட்டம் அலைமோதுவதையும் நாம் கேள்விப்பட்டிருப்போம். இதன் காரணமாக, பல பிரபல உணவகங்களும் பிரியாணி பிரியர்களுக்கு என அசத்தலான அறிவிப்புகளையும் வழங்குவார்கள்.

அந்த வகையில் ஒரு அறிவிப்பை தான் பிரபல உணவகம் ஒன்று அறிவித்திருந்தது. நாமக்கல் - மோகனூர் சாலையில், காலித் என்ற பிரியாணி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில், சமீபத்தில் ஒரு போட்டி நடைபெற்றது. பிரியாணி சாப்பிடுவோருக்கான போட்டியில், கட்டணமாக 99 ரூபாய் வசூலிக்கப்பட்டு, 5001 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

Namakkal Biriyani eating competition in 20 minutes

Image subjected to © copyright to the respective owner.

இதனைத் தொடர்ந்து, குலுக்கல் முறையில் தேர்வான நபர்களுக்கு மத்தியில் 20 நிமிட போட்டியும் நடைபெற்றுள்ளது. பலரும் முட்டி மோதி சாப்பிட்ட சூழலில், சிலர் ஓரளவுக்கு மேல் சாப்பிட முடியாமலும் திணறினர். இறுதியில், நாமக்கல்லை சேர்ந்த சரவணன் என்பவர் முதலிடம் பிடித்து 5001 ரூபாய் பரிசை வென்றார். இவர் 20 நிமிட நேரத்தில் மொத்தம் 2 கிலோ 600 கிராம் அளவு பிரியாணியை சாப்பிட்டு முதல் பரிசையும் வென்றுள்ளார்.

Namakkal Biriyani eating competition in 20 minutes

Image subjected to © copyright to the respective owner.

இது தொடர்பான செய்தி தற்போது வைரலாகி வரும் சூழலில், Foodies -கள் பலரும் வியப்புடன் அந்த நபரை பார்த்து வருகின்றனர்.

BIRIYANI, COMPETITION

மற்ற செய்திகள்