Viruman Mobiile Logo top

"சட்டை'ய மாத்திட்டு வர்றதுக்குள்ள இப்டி நடந்துருச்சே.." வீட்டுக்கு போய்ட்டு வெளிய வந்ததும்.. காருக்குள் காத்திருந்த 'அதிர்ச்சி'!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் பேட்டை பகுதியில் அமைந்துள்ள மருதன் காலனியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 49). இவர் அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

"சட்டை'ய மாத்திட்டு வர்றதுக்குள்ள இப்டி நடந்துருச்சே.." வீட்டுக்கு போய்ட்டு வெளிய வந்ததும்.. காருக்குள் காத்திருந்த 'அதிர்ச்சி'!!

இவரது மகன் ஹரிஹரன் (25). பள்ளி சாலை அருகே கார் பார்க்கிங் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் தந்தை, மகனான பாலசுப்பிரமணி மற்றும் ஹரிஹரன் ஆகியோர், பரமத்திவேலூர் பைபாஸ் சாலை அருகே அமைந்துள்ள வங்கி ஒன்றில் இருந்து சுமார் 8 லட்சம் ரூபாயும், அதன் பின்னர் ஒரு தனியார் நிறுவனத்தில் இருந்து சுமார் 12 லட்சம் ரூபாயும் என மொத்தம் 20 லட்சம் ரூபாயை இருவரும் எடுத்துக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

namakkal 20 lakhs kept in car went missing in day

தொடர்ந்து, தங்களின் காரில், பாலசுப்பிரமணி மற்றும் ஹரிஹரன் ஆகியோர் பேட்டை பகுதியிலுள்ள தங்களது வீட்டிற்கு வந்துள்ளனர். இதன் பின்னர், திருச்சி மாவட்டத்திலுள்ள தொட்டியம் பகுதிக்கு செல்வதற்காக, வீட்டிற்கு வந்த இருவரும் சட்டை மாற்றுவதற்காக உள்ளே சென்றுள்ளனர். அப்போது, 20 லட்சம் ரூபாய் பணத்தை காரிலேயே அவர்கள் வைத்து விட்டுச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

வீட்டிற்குள் சென்று, சட்டையை மாற்றி விட்டு, அவர்கள் திரும்பி வருவதற்கு முன், காரில் இருந்த பணத்தை காணவில்லை என கூறப்படுகிறது. இதனை அறிந்ததும் பாலசுப்பிரமணி மற்றும் ஹரிஹரன் ஆகியோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பதறிப் போன தந்தையும், மகனும் அப்பகுதியில் இருந்தவர்களிடம் இதுபற்றி விசாரித்துள்ளனர். அப்போது அங்கே இருந்தவர்கள், ஸ்கூட்டர் மற்றும் பைக் என இரண்டு வாகனங்களில் மூன்று பேர் சென்றதை பார்த்ததாக கூறினர்.

namakkal 20 lakhs kept in car went missing in day

உடனடியாக, இது பற்றி வேலூர் போலிஸுக்கு புகார் ஒன்றை பாலசுப்பிரமணி கொடுத்துள்ளார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், பணத்தை திருடி சென்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். சட்டை மாற்றி வரும் ஒரு சில நிமிடங்களுக்குள் நடந்த இந்த சம்பவம், வீடுகள் அதிகம் நிறைந்த பேட்டை பகுதியில் கடும் அதிர்ச்சியை உண்டு பண்ணியுள்ளது.

CAR, THEFT

மற்ற செய்திகள்