அவங்களால தான் எல்லாமே நடந்துச்சு...! 'அதுக்கு காரணமா இருந்த பாட்டிக்கு...' நான் 'இத' பண்ணலாம்னு இருக்கேன்...! போட்டோகிராபர் எடுத்த 'நெகிழ' வைக்கும் முடிவு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஏழைப் பாட்டியின் சிரிப்பை நாகர்கோயில் புகைப்படக் கலைஞர் ஜாக்சன் ஹெர்பி அழகாக எடுத்த புகைப்படம் பட்டிதொட்டியெங்கும் வைரலாக பரவியது.
தமிழக முதல்வரும் அந்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். மேலும், சமீபத்தில் நேரடியாக சென்று பாராட்டுகளைப் பெற்ற புகைப்படக் கலைஞர் ஜாக்சன் ஹெர்பி பாராட்டுக்குரிய புகைப்படத்திற்கு காரணமாக இருந்த பாட்டிக்கு ஒரு உதவியை மாதம்தோறும் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் சார்பாக ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இரண்டு தவணைகளாக 2000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. கடந்த மாதம் முதல் தவணை கொடுக்கப்பட்ட போது அதனைப் பெற்றுக் கொண்ட நாகர்கோயில் பகுதியை சேர்ந்த பாட்டி ஒருவர் பொக்கு வாயோடு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதை நாகர்கோயில் புகைப்படக் கலைஞர் ஜாக்சன் ஹெர்பி பிரமாதமாக க்ளிக் செய்து அசத்தியிருந்தார். அந்த புகைப்படத்தின் எதார்த்த தன்மை பட்டிதொட்டியெங்கும் வேகமாக வைரலாக பரவியது.
இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படக்கலைஞர் ஜாக்சன் ஹெர்பியை நேரில் அழைத்து புகைப்படத்திற்கான தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
ஒரு புகைப்படத்திற்கு கிடைக்கப்பெற்ற பாராட்டுகள் ஜாக்சனை உள்ளம் நெகிழ செய்துள்ளது. எனவே இதற்கு காரணமாக இருந்த பாட்டிக்கு மாதம் 2000 ரூபாய் தன்னுடைய சம்பளத்தில் இருந்து கொடுத்து உதவப் போவதாக ஜாக்சன் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்