'லீப் வருடத்தில் வந்த பிறந்த நாள்'...'சர்ப்ரைஸ் பண்ணலாம்னு இருந்தோமே'... பிறந்த நாளில் நடந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

லீப் வருடத்தில் வந்த பிறந்த நாளில், அதே நாளன்று தலைமை ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

'லீப் வருடத்தில் வந்த பிறந்த நாள்'...'சர்ப்ரைஸ் பண்ணலாம்னு இருந்தோமே'... பிறந்த நாளில் நடந்த சோகம்!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே முளகுமூடு பகுதியைச் சேர்ந்தவர் ஜஸ்டஸ் பிரவீன். இவர் முளகுமூடு பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி அல்லி ஜெயராணி, குலசேகரம் பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு பொர்பி என்ற மகளும், தர்ஷோன் என்ற மகனும் உள்ளனர். பொர்பி கல்லூரியிலும், தர்ஷோன் பிளஸ்-2 படித்து வருகிறார்கள்.

இதனிடையே பிப்ரவரி 29ம் தேதி ஜஸ்டஸ் பிரவீனுக்கு பிறந்த நாளாகும். எனவே மனைவி அல்லி ஜெயராணியுடன் முளகுமூடு பகுதியில் உள்ள ஆலயத்துக்குச் சென்றுள்ளார். லீப் வருடத்தில் வரும் பிறந்த நாள் என்பதால் அதனை விமரிசையாகக் கொண்டாட அவரது, மகனும், மகளும் திட்டமிட்டிருந்தார்கள். இந்த சூழ்நிலையில் ஆலயத்திற்குச் சென்று விட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த ஜஸ்டஸ், கூனிமாவிளை அருகே வரும் போது, எதிரே பைக்கை ஓட்டி வந்த ஜெபர்சன் என்ற இளைஞர் வேகமாக மோதினார்.

இந்த கோர விபத்தில் தூக்கி எறியப்பட்ட ஜஸ்டஸ் பிரவீன் படுகாயம் அடைந்தார். ஆபத்தான நிலையிலிருந்த அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்கள். காயமடைந்த அவருடைய மனைவி அல்லி ஜெயராணி, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த ஜஸ்டஸ் சிகிச்சை பலனின்றி பரிதமபாக உயிரிழந்தார்.

லீப் வருடத்தில் வரும் தந்தையின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக மகிழ்ச்சியிலிருந்த குடும்பம், தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளது. பிறந்த நாளன்று தலைமையாசிரியர் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ACCIDENT, MOTORCYCLE CRASH, HEADMASTER, DIES, SCHOOL