காசியின் மேலும் ஒரு 'நண்பர்' கைது... காசிக்கே 'அல்வா' குடுக்க பாத்துருக்கான்... தோண்ட தோண்ட வெளியாகும் 'அதிர்ச்சி' தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாகர்கோவிலை சேர்ந்த காசி என்ற இளைஞர் நூற்றுக்கணக்கான பெண்களை ஏமாற்றி பாலியல் ரீதியாகவும் பண ரீதியாகவும் மோசடி செய்த நிலையில், இளம்பெண் கொடுத்த புகார் ஒன்றின் பெயரில் காசியை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், பெண்களை மோசடி செய்ததில் காசியின் நண்பரும் தொடர்பில் இருப்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் ஜினோ எனபவர் கைது செய்யப்பட்டார். அதே போல வெளிநாட்டில் இருக்கும் கெளதம் என்ற நண்பருக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
காசி வழக்கு சிபிசிஐடி கையில் சென்றதும், காசி மற்றும் அவரது நண்பர் ஜினோவை அழைத்துக் கொண்டு காசியின் வீட்டிற்கு அழைத்து சென்று சோதனை நடத்தியதில் 3 செல்போன்கள், ஒரு மெம்மரி கார்டு ஆகியவை கிடைத்தன. அதனை தொடர்ந்து, காசி அளித்த தகவலின் பெயரில் கணபதிபுரத்தை சேர்ந்த அவரது நண்பர் தினேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வசதியான குடும்பத்தை சேர்ந்த தினேஷிடம், காசி தான் கழற்றி விட நினைக்கும் பெண்களின் எண்களை கொடுத்து விடுவார். அந்த பெண்களிடம் காசி குறித்து எதாவது கூறி காசியிடம் பெண்களை விலக்கி வைப்பது தான் தினேஷின் வேலை. ஆனால் காசியை போல தானும் முயற்சி செய்தால் என்ன என தினேஷ் திட்டமிட்டதாக தெரிகிறது.
இதனையடுத்து காசியால் புறக்கணிக்கப்பட்ட பெண்களை தினேஷ் தனியாக சந்தித்து காசி குறித்து பல தகவல்களை கூறி அந்த பெண்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார் தினேஷ். இதனை பயன்படுத்தி சில பெண்களுடன் தனியாக இருந்ததும் தெரிய வந்துள்ளது. அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பயன்படுத்தி காசி வழியில் தினேஷும் சில பெண்களை மிரட்டியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
தினேஷை போலீசார் கைது செய்த நிலையில், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தொலைபேசியில் பல ஆபாச படங்கள் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்