'நாகர்கோவில் 'காசி' வழக்கில்... புதிய திருப்பம்!!!'.. முக்கிய கூட்டாளியை வளைக்க... போலீசார் அதிரடி திட்டம்!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாகர்கோவில் காசி வழக்கில் அவரது கூட்டாளி ஒருவரின் பாஸ்போர்ட்டை சிபிசிஐடி போலீசார் முடக்கியுள்ளனர்.
தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த இளம்பெண்களை சமூக வலைதளங்களின் மூலம் காதலிப்பது போல நடித்து ஏமாற்றிய நாகர்கோவில் காசி குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் 6 பேர் காவல்துறையிடம் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து, அவர் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு வழக்கு கந்து வட்டி தொடர்பான வழக்காகும்.
இந்த சம்பவத்தில், காசிக்கு உறுதுணையாக இருந்த சில இளைஞர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த காசியின் நண்பர் தினேஷ் என்பவர், வெளிநாட்டில் வசித்து வருகிறார். அவரை இங்கு வரவழைப்பதற்கான முயற்சியில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டுவருகின்றனர்.
அதற்கு அவர் சரியான ஒத்துழைப்பு வழங்காததால், அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது.
மேலும், காசியின் கந்து வட்டி வழக்கில் மட்டும் தற்போது சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
இன்னும் 10 நாட்களில் மீதமுள்ள 6 வழக்குகளிலும் சிபிசிஐடி காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், காசி தரப்பில் ஜாமினுக்கு முயற்சி செய்து வருவதால், சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணிகளை வேகப்படுத்தியுள்ளனர்.
மற்ற செய்திகள்