'நாகர்கோவில் காசி வழக்கில் அடுத்த ஆக்சன்...' 'இந்த தடவ கடல் தாண்டி...' - சிபிசிஐடி போலீசார் அதிரடி திட்டம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த 28 வயதான காசி என்னும் இளைஞர் சமூகவலைத்தளம் மூலம் ஆசை வார்த்தை பேசி கல்லூரி மாணவிகள், பேராசிரியைகள், மருத்துவர்கள் என பெண்களை குறிவைத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்தார். அதுமட்டுமில்லாமல் பாதிக்கப்பட்ட பெண்களிடம் பணம் பொருட்களை வாங்கி அனுபவித்து வந்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு மருத்துவர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் காசியின் வண்டவாளம் எல்லாம் தண்டவாளத்தில் ஏறி காசி மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இவ்வழக்கில் காசியின் தந்தை தங்கபாண்டியன், மற்றும் நண்பர் டேசன் ஜினோ, கவுதம் ஆகியோரும் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் நாகர்கோவிலில் காசியின் வீட்டில் கைப்பற்றப்பட்ட லேப்டாப், மற்றும் செல்போன்களில் இருந்து வலுவான ஆதாரங்களை சிபிசிஐடி போலீசார் திரட்டியுள்ளனர். காசியால் ஏமாற்றப்பட்ட பெண்களிடம் ரகசிய வாக்கு மூலங்களையும் பெற்றுள்ளனர்.
பாலியல் குற்றங்களில் காசிக்கு உதவிய நாகர்கோவிலைச் சேர்ந்த மற்றொரு நண்பர் துபாயில் இருப்பதால், அவரையும் கைது செய்வதற்கு தேவையான ஆதாரங்களை திரட்ட சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர்.
மற்ற செய்திகள்