‘ஆபாச வீடியோ எடுத்ததோட நிறுத்தல’!.. காசியால் இளம்பெண்கள் அனுபவித்த கொடுமை.. சிபிசிஐடி தாக்கல் செய்த 400 பக்க குற்றப்பத்திரிக்கை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாகர்கோவில் காசி வழக்கில் சுமார் 400 பக்க குற்றப்பத்திரிக்கையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் பழகி சென்னை பெண் டாக்டர் உள்பட பல இளம்பெண்களை ஏமாற்றி ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்த காசி மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். இதனை அடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஏற்கனவே காசி மீதான ஒரு கந்து வட்டி வழக்கில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.
இது தவிர நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2 வழக்குகள், கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் நாகர்கோவில் நேசமணிநகர் காவல் நிலையத்தில் தலா ஒரு வழக்கும், சிபிசிஐடி போலீசார் தனியாக ஒரு வழக்கும் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்குகள் அனைத்தும் பாலியல் வன்கொடுமை, ஆபாச படமெடுத்து மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்தவை.
இந்த வழக்குகளில் தனித்தனியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசார் முடிவு செய்தனர். அதன்படி நாகர்கோவில் நேசமணிநகர் காவல் நிலையத்தில் பதிவாகி இருந்த வழக்கு தொடர்பாக நேற்று மாலை, நாகர்கோவில் ஜே.எம்.1 நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
சுமார் 400 பக்க குற்றப்பத்திரிகையில், இளம்பெண்களிடம் எவ்வாறெல்லாம் பழகி காசி மற்றும் அவரது நண்பர்கள் ஏமாற்றினர் என்பது தொடர்பான தகவல்கள் மற்றும் ஆதாரங்களை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.
அதில், ஆபாச வீடியோக்கள் எடுத்து ஈவு இரக்கமின்றி இளம்பெண்களை கொடுமைப்படுத்தி காசி கும்பல் ரசித்துள்ளதாகவும், பெண்களிடம் மிக கொடூரமானவர்களாக நடந்துள்ளதாகவும் குற்றப்பத்திரிகையில் சிபிசிஐடி போலீசார் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. பொங்கல் விடுமுறைக்கு பின் மேலும் 2 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
News Credits: Dinakaran
மற்ற செய்திகள்