‘கண்முன்னே’ பள்ளி ‘மாணவிக்கு’ நேர்ந்த பயங்கரம்... ‘புலம்பியபடியே’ இருந்த ‘உறவினர்’ எடுத்த ‘விபரீத’ முடிவு...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சிறுமி சாலை விபத்தில் உயிரிழக்க தானே காரணம் எனக் கூறி அவருடைய உறவினர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியைச் சேர்ந்த மதியழகன் என்பவருடைய மகள் மகரஜோதி. இவர் சனிக்கிழமை காலை வீரமணி எனும் தனது உறவினர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்போது தெற்குப்பொய்கை நல்லூர் கிழக்கு கடற்கரை சாலையைக் கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின்மீது, அரசுப் பேருந்து மோதியதில் சிறுமி மகரஜோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து தன் கண்முன்னே சிறுமி உயிரிழந்ததை தாங்க முடியாமல் மன உளைச்சலில் இருந்துவந்த வீரமணி புலம்பியபடியே இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் மண்டுவாக்கரை சவுக்குத்தோப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வீரமணியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பள்ளி மாணவி விபத்தில் உயிரிழந்த நிலையில், மன உளைச்சலில் அவருடைய உறவினரும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்ப்குதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.