‘உலகை அழிக்கணும்னா 5 நாள்லயே செஞ்சு காட்டிருப்பாங்க’.. ‘கொரோனா நடத்தியிருக்கும் பெரும்பாடம்’.. சீமான் ட்வீட்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உலகை அழித்து முடிக்க வேண்டுமென்றால் ஐந்து நாட்களிலேயே செய்து காட்டிருப்பார்கள். காப்பாற்ற வேண்டும் என்றவுடன் திணறிக் கொண்டிருக்கிறார்கள் என சீமான் விமர்சனம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் கடுமையாக போராடி வருகின்றன. இதில் சீனா, இத்தாலி, அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளில் அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ‘உலகை அழித்து முடிக்க வேண்டுமென்றால் ஐந்து நாட்களிலேயே செய்து காட்டிருப்பார்கள். காப்பாற்ற வேண்டும் என்றவுடன் திணறிக் கொண்டிருக்கிறார்கள். அறிவியல் எப்போதும் அறவியலாகத்தான் இருக்கவேண்டுமேயொழிய அழிவியலாக இருக்கக் கூடாது. கொரோனோ நமக்கு நடத்தியிருக்கும் பெரும்பாடம். அனைவரும் கற்போம்!’ என பதிவிட்டுள்ளார்.
உலகை அழித்து முடிக்க வேண்டுமென்றால் ஐந்து நாட்களிலேயே செய்து காட்டிருப்பார்கள். காப்பாற்ற வேண்டும் என்றவுடன் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.
அறிவியல் எப்போதும் அறவியலாகத்தான் இருக்கவேண்டுமேயொழிய அழிவியலாக இருக்கக் கூடாது. கொரோனோ நமக்கு நடத்தியிருக்கும் பெரும்பாடம்.அனைவரும் கற்போம்!
— சீமான் (@SeemanOfficial) April 8, 2020