அசுர வளர்ச்சி!.. தமிழகத்தின் மாற்று சக்தியாக உருவெடுக்கிறது நாம் தமிழர் கட்சி!.. அதிரவைக்கும் தேர்தல் முடிவுகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் திமுக, அதிமுகவுக்கு அடுத்த இடத்தில் நாம் தமிழர் கட்சியே அதிக வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.
2021 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 5 முதல்வர் வேட்பாளர்கள் களம் கண்ட இந்த தேர்தலில், திமுக, அதிமுக என இரு பெரும் திராவிட கட்சிகளுக்கு அடுத்த இடத்தில், நாம் தமிழர் கட்சி தான் அதிக வாக்குகள் பெற்றுள்ளது.
நாம் தமிழர் கட்சி 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2016-ஆம் ஆண்டிலிருந்துதான் நாம் தமிழர் கட்சி தேர்தல்களில் போட்டியிட ஆரம்பித்தது. அதற்கு முந்தைய 2011 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2014 மக்களவைத் தேர்தல்களில் போட்டியிடவில்லை. 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு 1.07% வாக்குகளைப் பெற்று ஒன்பதாமிடம் வந்தது.
2017-ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு 2.15% சதவிகிதத்துடன் நாம் தமிழர் கட்சி நான்காவது இடம் பெற்றது. 2019-ஆம் ஆண்டு 22 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு 3.15% வாக்குகளை பெற்றது. அதேபோல் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டு 3.9% வாக்குகளை பெற்றது. இதனிடையே 2019 உள்ளாட்சி தேர்தலில் ராஜாக்காமங்கலம் ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார்.
தற்போது 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டது. இதில் சரிபாதி ஆண், பெண் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிறுத்தியுள்ளார். தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகள் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி வளர்ச்சிப் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது.
இந்நிலையில், தமிழகத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றாக நாம் தமிழர் உருவெடுத்து வருகிறது என்பது உறுதியாகியுள்ளது. நாம் தமிழர் கட்சி அனைத்து தேர்தல்களிலும் தனித்துப் போட்டியிடுவது தான் இதற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்