தோப்புக்குள்ள செல்பி எடுத்த இளைஞர்.. தென்னைமரத்துக்கு மேல தெரிஞ்ச அமானுஷ்ய உருவம்.. உறைந்துபோன கிராமத்தினர்.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விழுப்புரம் மாவட்டத்தில் தென்னை மரத்தில் மர்ம உருவம் தென்பட்டதாக தகவல் வெளியாகிய நிலையில் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

தோப்புக்குள்ள செல்பி எடுத்த இளைஞர்.. தென்னைமரத்துக்கு மேல தெரிஞ்ச அமானுஷ்ய உருவம்.. உறைந்துபோன கிராமத்தினர்.. வீடியோ..!

Also Read | அப்பாவி பெண்ணின் பணத்துடன் ஓட்டம் பிடித்த திருடர்கள்.. சரியான நேரத்துல ஸ்பாட்க்கு வந்த போலீஸ்.. திக்.. திக்.. வீடியோ..!

விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் அடுத்துள்ள வைடப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கபூர் கான். இவருக்கு இந்த கிராமத்தில் 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. தென்னை மரங்கள் நிறைந்த தோட்டத்தில் வேளாண்மை செய்து வருகிறார் கபூர். இவருக்கு ஜமால் எனும் மகன் உள்ளார். கல்லூரி மாணவரான ஜமால் தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருக்கிறார். அப்போது, வீட்டில் போரடிக்கவே, தங்களது தோட்டத்திற்கு சென்றிருக்கிறார் ஜமால்.

Mysterious shape found while youngster takes selfie In Villupuram

அப்போது அருகில் இருந்த கபூருடைய சகோதரியின் தோட்டத்திற்குள் அவர் சென்றிருக்கிறார். அங்கே அவர் செல்பி எடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், அவருக்கு பின்புறம் இருந்த தென்னை மரத்தில் வித்தியாசமான உருவம் இருந்தது புகைப்படத்தில் பதிவானதாகவும் அதனால் தான் அதிர்ச்சியடைந்ததாகவும் கூறுகிறார் ஜமால். இதனால் அங்கிருந்து ஓடிய அவர், வீட்டில் உள்ள பெற்றோரிடம் சென்று இதுபற்றி கூறியுள்ளார்.

இதனையடுத்து, கபூர் கான் மற்றும் அவரது மனைவி தோட்டத்திற்கு ஓடியுள்ளனர். ஆனால், அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக ஏதும் தென்படவில்லை. இதனிடையே, கபூரின் சகோதரி தனக்கும் இதுபோன்ற அனுபவம் ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளார். சில வருடங்களுக்கு முன்னர் தன்னுடைய தோட்டத்தில் துணி துவைத்துக்கொண்டு இருந்ததாகவும் அப்போது, புடவை ஒன்று காற்றில் பறந்து அங்கிருந்த மரத்தில் (ஜமால் குறிப்பிட்ட அதே மரம்) சிக்கிக்கொண்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Mysterious shape found while youngster takes selfie In Villupuram

மேலும், பெண் ஒருவர் சேலை தலைப்பால் தனது தலையை மறைத்துக்கொண்டது போல அந்த உருவம் இருந்ததாகவும், அதன் பின்னர் தனது கணவர் வந்து புடவையை எடுத்துக் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். அந்த தோட்டத்தில் தனக்கு இப்படியான அனுபவம் ஏற்பட்ட நிலையில், தனது அண்ணன் மகனுக்கும் அதேபோல விசித்திர அனுபவம் ஏற்பட்டிருப்பது பல கேள்விகளை எழுப்பியிருப்பதாகவும் அந்த பெண்மணி தெரிவித்திருக்கிறார். இதனால் அந்த கிராம மக்கள் இதுபற்றி பரபரப்புடன் பேசிவருகின்றனர்.

Also Read | "அவரு இங்கிலாந்து பிரதமர் இல்ல".. Throwback படத்தை பகிர்ந்து பங்கமாக கலாய்த்த அசாருதீன்..!

MYSTERIOUS SHAPE, VILLUPURAM, COCONUT TREE

மற்ற செய்திகள்