'ரொம்ப நேரமா ஒரே இடத்துல கிடந்த பை...' 'டக்குனு மின்னல் வேகத்தில் மறைந்த ஒரு மர்ம நபர்...' - அதிர்ச்சியடைந்த மக்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் மர்மபொருள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புறநகர் மற்றும் மாநகர் பேருந்து நிலையங்கள் எப்போதும் மக்கள் பரபரப்புடனும், கடைகள் நெரிசல்களுடன் காணப்படும். அதுபோன்ற காஞ்சிபுரம் மாவட்டத்தின் பேருந்து நிலைய நுழைவு வாயில் பகுதியில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் வியாபாரிகள் கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அப்பேருந்து நிலையத்திற்கு வந்த மர்மநபர் ஒருவர் ஒரு பையைக் கொண்டுவந்து அங்கு வைத்துவிட்டு சட்டென மறைந்துள்ளார்.
பல மணி நேரமாக ஒரே இடத்தில் இருந்த பையைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், வியாபாரிகள் அந்தப் பையை திறந்து பார்த்தபோது வயர்களினால் பின்னப்பட்ட உருளையான பொருள் ஒன்று அதில் இருந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி வியாபாரிகள், பையை எடுத்து பேருந்து நிலையம் அருகேயிருந்த கால்வாயில் வைத்துவிட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர்.
அதன்பின் கைப்பையை கைப்பற்றிய காவல்துறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். பையில் இருந்த வயர் சுற்றியிருந்த உருளைப் பொருளை ஆய்வு செய்த பின்னரே அது வெடிகுண்டு சம்பந்தப்பட்ட பொருளா என்று தெரியவரும் என காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்போது பேருந்துநிலையம் அருகேயுள்ள சிசிடிவி கேமிராக்களை போலீசார் ஆய்வுசெய்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்