“200 கார்.. 20 மாடிலாம் வேணாம்.. டைரக்ட் பண்ணிட்டு இருக்கும்போதே செத்துரணும்..” மிஷ்கின் உருக்கம்.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழ் சினிமாவின் இயக்குனர்களில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி திரைப்படங்கள் இயக்கி வருபவர் இயக்குனர் மிஷ்கின்.

“200 கார்.. 20 மாடிலாம் வேணாம்.. டைரக்ட் பண்ணிட்டு இருக்கும்போதே செத்துரணும்..” மிஷ்கின் உருக்கம்.!

Also Read | Baba: “பாபா ரஜினி சார் தயாரிப்பு.. ஓடிடில இல்ல.. ரீ ரிலீஸ் ஆனா அண்ணாமலை, பாஷா மாதிரி ஹிட் ஆகும்.” - சுரேஷ் கிருஷ்ணா..!

சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான மிஷ்கின், அஞ்சாதே, நந்தலாலா தொடங்கி ஓநாயும் ஆட்டுக்குட்டியும், துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட பல படங்களையும் இயக்கி உள்ளார். தற்போது பிசாசு 2 படத்தை மிஷ்கின் இயக்கி இருந்த நிலையில், இதன் ட்ரைலர் மற்றும் பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி இருந்தது. மேலும், இந்த படத்தில் முதன்மை கதாபத்திரத்தில் ஆண்ட்ரியாவும், சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.

இயக்கம் மட்டுமில்லாமல், சில படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கவும் செய்துள்ள இயக்குனர் மிஷ்கின், தனக்கென ஒரு ஸ்டைலில் திரைப்படங்கள் இயக்குவது மூலம் பலரின் பேவரைட் இயக்குனராகவும் வலம் வருகிறார். இந்த நிலையில், Behindwoods சேனல் சார்பில் நடத்தப்பட்ட 'Mysskin Fans Festival' நிகழ்ச்சியிலும் இயக்குனர் மிஷ்கின் கலந்து கொண்டிருந்தார். இதில், பல சுவாரஸ்ய தகவல்களை ரசிகர்கள் முன்னிலையில் மிஷ்கின் பேசியுள்ளார்.

Mysskin emotional about his film making passion Exclusive

இதில் தான் பண்ணும் சினிமா குறித்து பேசிய மிஷ்கின் “நான், இயக்குனர் ராம், தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்ட இயக்குனர்கள் எல்லாம் கிட்டத்தட்ட ரியலஸ்டிக் பேன்டசி வகையான திரைப்படங்களை  இயக்குவதற்கு முயற்சிக்கிறோம். இந்த திரைப்படங்களில் மிகவும் அதீத கற்பனவாத நிகழ்வுகள் இருக்கும். எனக்கும் சில நல்ல பார்வையாளர்கள் இருக்கிறார்கள். சுமார் 10 லட்சம் பேர் தமிழகத்தில் நான் எடுக்கும் படங்களை பார்க்கிறார்கள். நான் பெரிய ஹீரோக்களை வைத்து கமர்ஷியல் படம் பண்ண வேண்டும் என இறங்கினால் என்னை கடுமையாக விமர்சிப்பவர்களும் இவர்கள்தான். மிஷ்கின் காசுக்காக ஆசைப்பட்டு விட்டார் என்று சொல்லிவிடுவார்கள். நான் கவனமாகவே என்னுடைய படங்களை உருவாக்குகிறேன். எனக்கு மிகப்பெரிய லட்சியங்கள் இல்லை. 200 கார், 20 மாடி பங்களா என்று ஆடம்பரமாக சுகிக்க விரும்பவில்லை. துப்பறிவாளன் திரைப்படம் விஷாலுக்கு என்று கமர்சியலாக பண்ணப்பட்ட படம்தான். இதேபோல் தாணு சாருக்கு ஒரு படம் பண்ணுகிறேன். அந்த கதை சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது இரண்டாவது நிமிடத்திலே கதையை நிறுத்திய அவர் அட்வான்ஸ் கொடுத்து கதை மிகவும் பிடித்திருக்கிறது என்றார்.

நான் சினிமா என்றாலே குஷியாகிவிடுவேன். சினிமாவே எனக்கு டான்ஸ்தான். நான் டைரக்ட் பண்ணிட்டு இருக்கும்போதே செத்து போயிரணும். ஆக்‌ஷன் சொல்லி கட் சொல்லாமல் செத்துடணும். அப்படித்தான் என் சாவு இருக்க வேண்டும் என நினைக்கிறேன். புகழுக்கும் விமர்சனத்துக்கும் இடையில் என்னை பேலன்ஸாக வைத்திருக்கிறேன்,. இரண்டுக்கும் நான் தகுதியானவனா என என் மனசாட்சிக்குதான் தெரியும்.” என கூறினார்.

Also Read | "உங்க ஆட்டத்துக்கு ஊரே ஆடுமே".. தோனி டான்ஸ்க்கு ரஞ்சிதமே பாட்டை Mix செய்த CSK அணி! வைரலாகும் பார்ட்டி வீடியோ

MYSSKIN

மற்ற செய்திகள்