“சொல்லுங்க... சொல்லுங்க.. பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்தீங்க!”.. இது இவருக்குதான் பொருந்தும்.. அரசு அலுவலகத்தில் தேநீர் விற்பவருக்கு பின்னால் இப்படி ஒரு மெர்சல் ‘ப்ளாஷ்பேக்!’

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஒரு காலத்தில் மும்பையில் பிரபல தாதாவாக வலம் வந்த தமிழகத்தைச் சேர்ந்த நபர், அதற்காக அளிக்கப்பட்ட ஆயுள் தண்டனைக்கு பிறகு, சிறை வாழ்க்கையில் மனம் திருந்தி, தற்போது அரசு அலுவலகங்களில் தேநீர் விற்று வாழ்ந்து வருகிறார்.

“சொல்லுங்க... சொல்லுங்க.. பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்தீங்க!”.. இது இவருக்குதான் பொருந்தும்.. அரசு அலுவலகத்தில் தேநீர் விற்பவருக்கு பின்னால் இப்படி ஒரு மெர்சல் ‘ப்ளாஷ்பேக்!’

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணதாசன். இந்த நபர் சிறுவயதிலேயே பிழைப்பு தேடி மும்பை சென்றுள்ளார். அங்கு இவருக்கு ரவுடிகளுடனான ஏற்பட்ட தொடர்புகள் காரணமாக, கொலை, கொள்ளை கட்டப்பஞ்சாயத்து என தவ்லத்தாகவும், தாதாவாகவும், ஏரியா ரவுடியாகவும் வலம் வந்திருக்கிறார்.

இதனால் இது தொடர்பான மற்றும் இதற்கும் மேற்பட்ட வழக்குகளில் சிக்கிய கண்ணதாசனுக்கு 1988 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்து மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை அடுத்து மும்பை சிறையிலும் கடலூர் மத்திய சிறையிலும் 20 ஆண்டுகளை கழித்துள்ளார் முன்னாள் தாதா கண்ணதாசன்.

அத்துடன் சிறைவாசக் காலத்தில், சிறையில் இவருக்கு கற்பிக்கப்பட்ட யோகா, தியானம் உள்ளிட்டவற்றால் மனம் திருந்தியதை அடுத்து, சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியில் வந்ததும். கணவரை இழந்த பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்ட கண்ணதாசன், தற்போது மனைவிக்கு பொறுப்பான கணவராகவும், நாட்டின் பொறுப்பான குடிமகனாகவும், விருத்தாசலத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் தேநீர் வியாபாரம் செய்து வாழ்ந்து வருகிறார்.

மற்ற செய்திகள்