‘பஸ்ல போறீங்களா’! ‘இனி 100 மீட்டருக்கு முன்னாடியே தெரிஞ்சிரும்’!.. அசத்திய சென்னை போக்குவரத்து கழகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிகள் இறங்கும் இடம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிடும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

‘பஸ்ல போறீங்களா’! ‘இனி 100 மீட்டருக்கு முன்னாடியே தெரிஞ்சிரும்’!.. அசத்திய சென்னை போக்குவரத்து கழகம்..!

சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின் சார்பில் சுமார் 3000 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் இறங்குவதற்கு வசதியாக, இறங்கும் இடம் தொடர்பாக சுமார் 100 மீட்டர் முன்பாகவே அறிவிக்கும் ஜிபிஎஸ் கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக 50 பேருந்துகளில் இந்த ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

அதில், அண்ணா சதுக்கம்-பூந்தமல்லி வழித்தடத்தில் இயக்கப்படும் 25ஜி, பூந்தமல்லி-திருவொற்றியூர் இடையே இயக்கப்படும் 101 மற்றும் பிராட்வே-கேளம்பாக்கம் வழித்தடத்தில் இயக்கப்படும் 570 ஆகிய தடம் எண் கொண்ட பேருந்துகளில் இந்த ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. வெளியூர் பயணிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும் என கருதப்படுகிறது.

CHENNAI, MTC, BUS, GPS