தண்டனை சட்டத்தில் இதெல்லாம் சேர்க்கப்பட வேண்டும்.. மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் பேச்சு.. முழு விபரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்திய தண்டனைச் சட்டத்தில் பெண் படுகொலை வகையை விரிவாக சேர்க்க வேண்டும் என மக்களவை உறுப்பினர் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தி இருக்கிறார்.

தண்டனை சட்டத்தில் இதெல்லாம் சேர்க்கப்பட வேண்டும்.. மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் பேச்சு.. முழு விபரம்..!

                                Images are subject to © copyright to their respective owners.

Also Read | இறந்துட்டாருன்னு இறுதி சடங்கு செய்த குடும்பம்.. உயிருடன் கண்டுபிடிச்ச போலீஸ்.. பகீர் பின்னணி..!

தென் சென்னை தொகுதி மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் இன்று மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பெண் படுகொலை வகையை இந்திய தண்டனைச் சட்டத்தில் விரிவாக சேர்க்க வேண்டும் எனவும் பெண்கள் படுகொலை செய்யப்படும்போது அவை தளர்வான அளவில் குறிப்பிடப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக மக்களவையில் அவர் பேசிய கருத்துக்களை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்திலும் அவர் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில்,"பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது அவர்களின் மனம், உடல் மற்றும் ஆன்மாவின் மீதான தாக்குதல் மட்டுமல்ல. மாறாக பெண்கள் மீது ஆண் ஆதிக்க மனநிலையின் தவறான வெளிப்பாடு ஆகும். அது டெல்லியில் நண்பரால் பெண்ணுக்கு நடந்த சம்பவமாக இருந்தாலும் சரி, ஜார்கண்டை சேர்ந்த பெண் ஒருவருக்கு நடந்ததாக இருந்தாலும் சரி அவை வன்முறையே. ஆனால் இவை எளிதான குற்ற சம்பவங்களை போல வகைப்படுத்தப்படுகின்றன".

MP Thamizhachi demands femicide included in Penal Code

Images are subject to © copyright to their respective owners.

"பெண் கொலைகள் அல்லது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குற்றவியல் நீதி அமைப்பிலிருந்து வசதியாகத் தவிர்க்கப்படுகின்றன. இவை தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் அறிக்கைகளில் கூட விரிவாக குறிப்பிடப்படுவது இல்லை. இந்திய தண்டனைச் சட்டத்தில் பெண்படுகொலை குறித்த விரிவான வரையறை இல்லை. மேலும் இவை வரதட்சணை தொடர்பான மரணங்கள் அல்லது குடும்ப வன்முறையின் பின்னணியில் நடந்ததாக தளர்வான அடிப்படையிலேயே குறிப்பிடப்படுகின்றன."

MP Thamizhachi demands femicide included in Penal Code

Images are subject to © copyright to their respective owners.

"இதுதொடர்பாக தகவல்கள் திரட்டப்பட்டு முறையான நடைமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக ஐ.நா. சபை உலகளாவிய அளவில் கணக்கெடுக்க அழைப்பு விடுத்த பிறகே, பிரச்சினையின் முக்கியத்துவம் அங்கீகரிக்கப்பட்டது. எனவே, இந்திய தண்டனைச் சட்டத்தில் பெண் படுகொலையை விரிவாக சேர்க்க தேவையான நடவடிக்கைகளைத் தொடங்கவும், பயனுள்ள வகையில் நம்பகமான தரவு சேகரிப்பை எளிதாக்கவும் அரசாங்கத்தை நான் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read | 500 மாணவிகளுக்கு மத்தியில் ஒரே ஒரு மாணவனா? .. பரீட்சை ஹாலில் மயக்கமே போட்டாப்ல.. பரபரப்பு சம்பவம்.!

MP THAMIZHACHI

மற்ற செய்திகள்