என்னது மலைப்பாம்பு மனுசனை விழுங்கிடுச்சா..? தீயாய் பரவிய வதந்தி.. கடைசியில் தெரியவந்த உண்மை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை அருகே மலைப்பாம்பு ஒன்று நாயை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கம்பூர் அடுத்த தேனக்குடிப்பட்டியில், அப்பகுதி மக்கள் சிலர் வனப்பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது வினோதமான சத்தம் ஒன்று கேட்டுள்ளது. இதனை அடுத்து அங்கு சென்று பார்த்தபோது மலைப்பாம்பு ஒன்று ஏதோ ஒரு உயிரினத்தின் விழுங்கிக் கொண்டிருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனை அடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனிடையே மலைப்பாம்பு மனிதனை தான் விழுங்கி விட்டது என வதந்தி பரவியதால், அப்பகுதியில் மக்கள் அதிகமாக கூடியுள்ளனர். இதனை தொடர்ந்து மலைப்பாம்பை பிடிக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். அப்போது மலைப்பாம்பு விழுங்கிய உயிரினத்தை வெளியில் உமிழ்ந்தது. அப்போதுதான் அது நாயை விழுங்கி இருந்தது என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பத்திரமாக மலைப்பாம்பு பிடிக்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இரை தேடித்தான் மலைப்பாம்பு நாயை விழுங்கியதாகவும், இதனால் கால்நடைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் வன உயிரினங்களின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில் மலைப்பாம்பு ஒன்று நாயை விழுங்கிய சம்பவம் மேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்