30 வருசமா ஆண் வேடமிட்டு வாழ்ந்து வரும் பெண்.. பின்னணியில் உள்ள உருக்கமான காரணம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மகளை வளர்க்க பெண் ஒருவர் 30 ஆண்டுகளாக ஆண் வேடமிட்டு வாழ்ந்து வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | "காதலி'ய பழி வாங்குறதுக்காக இப்படியா பண்ணுவே??.." சிக்கித் தவித்த 7 அப்பாவிகள்.. காட்டிக் கொடுத்த 'CCTV'..
தூத்துக்குடி மாவட்டம், முடிவைத்தானேந்தல் பகுதியை சேர்ந்தவர் சிவா பிள்ளை. இவர் சொக்கலிங்கபுரம் பகுதியை சேர்ந்த பேசியம்மாள் என்பவரை திருமணம் செய்தார். திருமணம் முடிந்து குழந்தை பிறந்து 15-வது நாளில் சிவா பிள்ளை எதிர்பாராத விதமாக இறந்து விட்டார். அதனால் அங்கிருந்து எப்போதும் வென்றான் அருகில் உள்ள காட்டுநாயக்கன் பட்டிக்கு தனது பெண் குழந்தையுடன் பேச்சியம்மாள் குடியேறியுள்ளார்.
இதனை அடுத்து அங்கிருந்து சிறு சிறு வேலைகள் பார்த்து வந்த அவருக்கு பாலியல் ரீதியாக அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மேலும் தனது குழந்தைக்கு அப்பா இல்லை என்ற கவலை இருக்க கூடாது என நினைத்துள்ளார். இதனால் ஆண் போல் முடிவெட்டி, ஆண் போல ஆடைகளும் அணிய தொடங்கியுள்ளார். இது அவரை ஆண்களிடமிருந்து பாலியல் சீண்டல்கள் ஏற்படாமல் காத்துள்ளது. மேலும் தனது பெயரையும் முத்து என மாற்றியுள்ளார்.
பின்னர், வறுமையின் காரணமாக பல ஊர்களுக்கு சென்று தொழில் செய்து வந்துள்ளார். அப்போது பேச்சியம்மாள் தன்னை பெண்ணாக காட்டிகொள்ளாமல், ஆணாகவே வலம் வந்துள்ளார். அதனால் பலரும் அவரை ‘அண்ணாச்சி’ என அழைத்து வந்துள்ளார்.
அதன்பிறகு, தூத்துக்குடிக்கு வந்த முத்து, ஊர் மக்களுக்கு அடையாளம் தெரியாத அளவுக்கு அளவில் வேட்டி, சட்டை உடுத்தி, கிராப் தலையுடன் ஆணாகவே காட்சியளித்துள்ளார். 30 ஆண்டுகளாக இதே தோற்றத்துடன் தான் முத்து இருக்கிறார். டீக்கடை, பரோட்டா கடை வரை வேலை பார்த்து வந்ததால் மாஸ்டர் என்றே அடையாளம் காணப்படும் அவரை ‘முத்து மாஸ்டர்’ என்றே ஊர்மக்கள் அழைக்கின்றனர்.
30 ஆண்டுகளுக்கு மேலாக இவரின் பெண்ணிற்கு தாய்க்கு தாயாக, தந்தைக்கு தந்தையாக வாழ்ந்து வருகிறார். மகளுக்கு கஷ்டப்பட்டு திருமணம் கட்டி கொடுத்து பாட்டியாக வலம் வருகிறார். கணவர் இறந்ததும் குழந்தையை வளர்ப்பதற்காக ஆண் வேடமிட்டு பெண் ஒருவர் வாழ்ந்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கணவர் இறந்த போது இறப்பு சான்றிதழ் வாங்கவில்லை. மேலும் ஆதார் அட்டையிலும் முத்து என்ற ஆண் பெயரே இருப்பதால் விதவை நிதி உதவி, முதியோர் ஓய்வூதியத்தொகை எதுவும் இவருக்கு கிடைக்கவில்லை. தற்போது வயதாகிவிட்டதால், முன்பு போல் வேலை செய்ய முடியவில்லை என்றும் இந்த ஓய்வூதியத்தொகை கிடைத்தால் உதவியாக இருக்கும் என்றும் முத்து மாஸ்டர் என்ற பேச்சியம்மாள் அரசுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்