'அசந்த நேரத்தில் காரியத்தை முடித்துக்கொண்டு எஸ்கேப்'.. அதிர்ந்துபோன சக பயணி.. கேஷூவலாக பெண் செய்த பரபரப்பு சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிரிட்டனில் சக பயணி ஒருவரின் சூட்கேசுடன் எஸ்கேப் ஆன Hajar Al Fahad என்கிற 26 வயது பெண் பயணி சிக்கியுள்ளார்.
Paddingtonலிருந்து Cardiff Central நோக்கி செல்லும் பயணிகள் ரயில் ஒன்றில் Fatima Al shatti என்கிற பெண்ணுடன் Hajar Al Fahad நைசாக பேச்சுக் கொடுத்து இறங்கும்போது அவரது சூட்கேஸை எடுத்துக்கொண்டு இறங்கிவிட்டார். Swansea என்கிற இடத்துக்கு வரும் வரை இதனை கவனிக்காத Fatima இறங்கும்போது சூட்கேஸை காணவில்லை என்பதை அறிந்ததும், பதறிப்போய் போலீஸாருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் Hajar-ன் ரயில் டிக்கெட்டை வைத்து அவரை போலீஸார் வளைத்துப் பிடித்து, 76,559 பவுண்டுகள் மதிப்புடைய கைக்கடிகாரங்கள் நகைகள் கொண்ட அந்த சூட்கேஸை கைப்பற்றினர்.
இதுபற்றி பேசிய Hajar நீதிமன்றத்தில் தான் தன் குழந்தைகளுக்காகவே இப்படி செய்ததாகக் குறிப்பிட்டது, அவருக்கு 8 மாத சிறை தண்டனைகளை விதித்த நீதிபதி அதனை 12 மாதங்களுக்கு தள்ளி வைத்துள்ளார். அத்துடன் 20 நாட்கள் மன நல மருத்துவர்களின் ஆலோசனை பெறுவதுடன் 150 மணி நேரம் ஊதியமின்றி பணிபுரிய வேண்டும் என்றும் Hajarக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். எனினும் இதற்கிடையில் Hajar ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால், உடனடி சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்