'அவர கல்யாணம் பண்ணது நான் இல்லை.. என் அம்மாதான்' - அதிரவைக்கும் பெண்!.. 'ஏமாத்திட்டாங்க' - கதறும் கணவர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூட்டைச் சேர்ந்த ரமேஷ் என்கிற சமையல் தொழிலாளி, தற்போது 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் தனக்கு திருமணம் ஆகி 10 வருஷம் கழித்து, துபாய்க்கு வேலைக்கு சென்றதாகவும், அந்த நேரம் பார்த்து தனது மனைவி ப்ரீத்தி, அகில் என்கிற இளைஞருடன் தொடர்பில் இருந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

'அவர கல்யாணம் பண்ணது நான் இல்லை.. என் அம்மாதான்' - அதிரவைக்கும் பெண்!.. 'ஏமாத்திட்டாங்க' - கதறும் கணவர்!

காரணம் 18 வயது கூட நிரம்பாத நிலையில், பாதிரியார் ஒருவரின் முன்னிலையில் தனக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட ப்ரீத்தி, 15 வயதிலேயே திருமணமானவர் என்றும், அதை மறைத்து தனக்கு 2வது முறையாக திருமணம் செய்துவைத்து தன்னை ஏமாற்றி மோசடி செய்துவிட்டதாகவும் அவர் கூறுகிறார்.

ஆனால் ரமேஷ்க்கும் ப்ரீத்திக்கும் 2 குழந்தைகள் இருக்கும் நிலையில், ரமேஷ்குமார் தன்னைத் திருமணம் செய்து கொண்டது உண்மைதான் என்றாலும், ஆவணங்களின்படி தனது தாயைத்தான் அவர் திருமணம் செய்துகொண்டதாகவும் கூறி திடுக்கிட வைத்த ப்ரீத்தி 50 ஆயிரம் ரூபாய் பணத்துக்காக தன்னை, தன் தாய், ரமேஷ்க்கு திருமணம் செய்து அனுப்பி வைத்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் ரமேஷ் தன்னை தினமும் சந்தேகப்பட்டு அடித்து உதைத்தாலும், குழந்தைகளை தன்னிடம் தர மறுத்ததாலும் தன் காதலன் அகிலிடம் தஞ்சம் அடைந்ததாகவும், அதன் பிறகு முக நூலில் ரமேஷ் அவதூறு செய்திகளை பரப்பியதால், அகிலை முறைப்படி திருமணம் செய்துகொண்டதாகவும் ப்ரீத்தி தெரிவித்துள்ளார்.

இத்தனை குழப்பத்துக்கும் காரணமான ப்ரீத்தியின் தாயார், தனது மகள் ப்ரீத்திக்கு 15 வயது இருக்கும்போதே ரமேஷ்க்கு திருமணம் செய்துவைக்க எண்ணியுள்ளார். அதன் மூலம் அவருக்கு 50 ஆயிரம் ரூபாய் பணம் கிடைக்கும் என்று திட்டமிட்டுள்ளார். ஆனால் திருமண பதிவு சான்றிதழுக்கான ஆவணத்தை கொடுக்க வேண்டுமே? அதற்காக ப்ரீத்தியின் தாயார் தனது பேரில் இருக்கும் தனது அடையாள ஆவணங்களையே கொடுத்து மகளுக்கு திருமணம் செய்துவைத்துள்ளார்.

அதனால்தான் தற்போது ரமேஷ்குமார் திருமணம் செய்துகொண்டது தன்னை அல்ல, தனது தாயை, அதாவது அவரது மாமியாரை என்று ப்ரீத்தி தெரிவித்துள்ளார்.

MOTHER, HUSBANDANDWIFE