'அம்மா இல்லாம இங்க யாரும் இல்ல...'- 19 வயது மகனுக்காக தாய் செய்த பெரும் தானம்..! குவியும் பாராட்டுகள்
முகப்பு > செய்திகள் > தமிழகம்தனது 19-வயது மகனுக்கு தாய் உறுப்பு தானம் செய்துள்ளது பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த இந்த தாய்- மகனுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.
திருச்சி லால்குடி பகுதியில் வசித்து வரும் 19-வயது இளைஞர் ஒருவர் சிறுநீரகக் கோளாறு பிரச்னையால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரது பிரச்னை கடுமையானதாக இருந்ததால் நிச்ச்சயமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் உறுதியாகக் கூறிவிட்டனர். இதனால் அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்துவதற்கான தேடுதல் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஆனால், அந்த இளைஞரின் தாயே முன்வந்து தன்னுடைய மகனுக்கு தனது ஒரு சிறுநீரகத்தை தானம் ஆக அளிக்கப் போவதாக முன்வந்துள்ளார். இதனால் கடந்த நவம்பர் மாதம் 25-ம் தேதி திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. தாயின் ஒரு சிறுநீரகத்தை எடுத்து மகனுக்கு மருத்துவர்கள் பொருத்தினர். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இந்த அறுவை சிகிச்சையின் பின் தாயும் மகனும் நலம் உடன் இருப்பதாக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த மருத்துவமனையில் பல சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளது. ஆனால், அவை அனைத்தும் இறந்தவர்கள் இடம் இருந்து பெறப்பட்ட சிறுநீரகங்களை உயிருடன் இருக்கும் ஒருவருக்குப் பொருத்தும் சிகிச்சையே நடந்துள்ளது.
ஆனால், தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் முதல் முறையாக உயிருடன் இருக்கும் ஒரு நபரிடம் இருந்து பெறப்பட்ட சிறுநீரகத்தை மற்றொரு நபருக்கு பொருத்தப்பட்டுள்ளது. அதுவும் இந்த சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ள்ளது. இதனால் தானம் அளித்த தாய்க்கும் அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர்களுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மற்ற செய்திகள்